பிரதமர் மோடி இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் - களத்தில் இறங்கிய அமர் பிரசாத் ரெட்டி!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்யாட் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டுமே முன்னிலைப்படுத்தி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை கவனித்த தமிழக பா.ஜ.க., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி போட்டியாக பிரதமர் மோடி படத்தை வைத்து அசத்தியுள்ளார்.
சென்னை மாநகரில் முதலமைச்சர் ஸ்டாலினை மட்டுமே முன்னிலைப்படுத்தும் விதமாக பெயர் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். ஆனால் அவரை மையப்படுத்தி விளம்பரங்கள் வைக்கப்படவில்லை. இதனை கவனித்த தமிழக பா.ஜ.க., நிர்வாகிகள் அதிரடியான செயலை செய்துள்ளனர்.
பிரதமர் மோடி இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் - களத்தில் இறங்கிய அமர் பிரசாத் ரெட்டி@amarprasadreddy #ChessOlympiad #PMmodi #TNbjp pic.twitter.com/pT2n7tGERi
— Kathir News (@KathirNews) July 27, 2022
சென்னையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஸ்டாலின் புகைப்படம் வைத்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விளம்பரம் செய்யப்பட்டது. அதில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை செஸ் ஒலிம்பியாட் பேனரில் அமர்பிரசாத் ரெட்டி ஒட்டினார். இது குறித்து அவர் பேசும்போது, செஸ் போட்டி தமிழகத்தில் மட்டும் இருந்து பங்கேற்பதில்லை, உலகத்தில் உள்ள அனைத்து வீரர்களும் பங்கேற்றும் விளையாட்டு நிகழ்ச்சியாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஸ்டாலின் படத்தை வைத்து பேனர் வைத்தால் வெளிநாட்டினருக்கு தெரியாது. ஆகையால் பிரதமர் மோடியின் படத்தை நாங்கள் வைத்துள்ளோம். இதே போன்று தமிழகம் முழுவதிலும் உள்ள பா.ஜ.க., நிர்வாகிகள் தொண்டர்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தார்.
Source, Image Courtesy: Twitter