'ஆணைக்கூப்பு' நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை மேற்கோளிட்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்!

Update: 2022-07-29 03:25 GMT

சென்னை: நேற்று(28-7-2022) நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நிகழ்ச்சியில், வைணவ பக்தி இலக்கியமான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை மேற்கோள்காட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று மாலை பிரம்மாண்டமான அழகிய கலை நிகழ்ச்சிகளுடன், 44'வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடந்தது.


தொடக்கவிழா நிகழ்ச்சியில் செஸ் விளையாட்டிற்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் "செஸ் விளையாட்டிற்கு தமிழ் இலக்கியத்தில் 'ஆணைக் கூப்பு' என்று பெயர் இருந்திருக்கிறது. 'ஆணை கூப்பு ஆடுவோர் போலவே' என்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது" என்று பேசினார்.


மேலும் பிரதமரை நோக்கி "இதுபோன்ற பல வாய்ப்புகளை தமிழகத்திற்கு தாருங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்" என்றும் பேசினார்.


"தி.மு.க இந்துத்துவா எதிர்ப்பு அரசியலை கைவிட்டுவிட்டு, இந்துக்களை மகிழ்விப்பதற்காக முயற்சிகளில் இறங்கிவிட்டதா? பிரதமர் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சு கூர்ந்நு கவனிக்கத்தக்கது." என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Tweet

Tags:    

Similar News