கோவை பா.ஜ.க'வினரை சீண்டிய தி.மு.க'வினர் - பதிலுக்கு உதயநிதி போஸ்டரை கிழித்தெறிந்த பா.ஜ.க'வினர்

Update: 2022-08-12 11:34 GMT

கோவை: கலெக்டர் உத்தரவை மீறி, 10 நாட்களுக்கும் மேலாக மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டிருக்கும் தி.மு.க போஸ்டர்களை பா.ஜ.க'வினர் கிழித்து எறிந்தனர்.


கோவை அவினாசி சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. மேம்பாலத்திற்காக 300க்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளது. தூண்களில் அனைத்துக்கட்சி போஸ்டர்களும் ஒட்டப்படும். "ஒட்டிய போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும்" என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.


ஆனால் கலெக்டரின் உத்தரவை மீறி, தி.மு.க போஸ்டர்கள் 10 நாட்களுக்கும் மேலாக மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்டித்து நேற்று இரவு பா.ஜ.க'வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தூண்களை ஒட்டப்பட்டிருந்த தி.மு.க போஸ்டர்களை " பாரத் மாதா கி ஜே!" என்று கோஷங்களை எழுப்பி கிழித்து எறிந்தனர். பின்னர் காவல்துறையினருக்கும் பா.ஜ.க'வினருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் பா.ஜ.க'வைச் சேர்ந்த 40 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளூர் தி.மு.க நிர்வாகிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் முக்கியமாக முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் புகழ்பாடி ஒட்டப்படும் போஸ்டர்களை கண்டு பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Dinamalar

Tags:    

Similar News