"யோவ் போயா!" பேராசிரியரே அவமரியாதை செய்த அமைச்சர் பொன்முடி! ஏன் தெரியுமா?
செங்கல்பட்டு: பல்கலைக்கழக விழாவில், பேராசிரியர் ஒருவரை தி.மு.க அமைச்சர் பொன்முடி அவமரியாதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே அதிருப்தியை பெற்று வரும் நிலையில், தற்போது நடைபெற்ற ஒரு சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், சிறந்த நூலகர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார். அப்போது நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்பே பார்வையாளர்கள் அரங்கை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தனர். இதைக்கண்ட அமைச்சர் பொன்முடி ஆத்திரம் அடைந்தார்.
அமைச்சர் கோபத்தில் உள்ள நேரம் பார்த்து, மதராஸ் நூலகத்தின் தலைவர் முனைவர் பேராசிரியர் நித்தியானந்தம், அமைச்சருக்கு சால்வை அணிவிக்க விரும்பிய பெண்ணை அமைச்சரிடம் அறிமுகம் செய்தார். அந்தப் பெண்ணிடம் சால்வையை பெற்றுக்கொண்ட அமைச்சர், பேராசிரியரை நோக்கி "யோவ் அந்தாண்ட போயா" என்று கத்தினார்.
இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில், அதிமுக அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்ட தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள், தற்போது தி.மு.க அமைச்சர்களின் செயல்களை கண்டித்து செய்திகளை வெளியிடாமல் போனது ஏன்? என்று கேள்விகள் தற்போது எழுகிறது.