தி.மு.க மாவட்ட செயலாளர் தேர்தலில் பணமழை - பா.ஜ.க பக்கம் சாய ரெடியாகும் மூத்த தி.மு.க நிர்வாகிகள்!

Update: 2022-09-26 06:23 GMT

திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். மதுரை உட்பட 8 மாவட்டங்களில் தலா இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒன்று வீதம் ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரையில் நகர் பகுதியில் இருந்த இரண்டு மாவட்டம் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே நகர் வடக்கு மா.செ.வாக இருந்த தளபதி எம்.எல்.ஏ.,க்கும், இளைஞரணி மாநில துணை செயலாளரான அதலை செந்திலுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஒரு தரப்பு சார்பில் பகுதி செயலாளருக்கு ரூ.5 லட்சமும், மாவட்ட பிரதிநிதிகளுக்கு தலா ரூ. 1 லட்சமும் பேரம் பேசி பட்டுவாடா நடக்கிறது.

தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ஒரு அமைச்சர் கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என நினைக்கிறார். தனது ஆதரவாளர் மாவட்ட செயலாளராக வர வேண்டும் என காய் நகர்த்துகிறார்.

நிர்வாகிகள் ஓட்டுக்களை பெற ஒரு தரப்பில் ஓட்டுக்கு ரூ.1 முதல் ரூ.5 லட்சம் வரை பட்டுவாடா செய்யப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை மீண்டும் சந்தித்து முறையிடவோ அல்லது பா.ஜ., பக்கம் செல்லவோ தயாராக உள்ளோம், என தெரிவித்துள்ளனர். 

Input From; Dinamalar 

Similar News