அமைச்சர் தியாகராஜனுக்கு பதிலடி: அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த கூட்டுறவு துறை அமைச்சர்!

Update: 2022-11-21 07:51 GMT

கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை. ரேஷன் அரிசி கடத்தல் என அங்கு பல தவறுகள் நடப்பதாக நிதி துறை அமைச்சர் தியாகராஜன் கருத்து தெரிவித்தார்.

கோபம் அடைந்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி எங்கள் துறை மக்களுக்கானது. ரேஷன் கடைகளை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை என பதிலடி கொடுத்தார். 

திமுக அமைச்சர்களுக்கு இடையே மோதல் வெடித்தது அக்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியது. 

இன்னும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இரு அமைச்சர்களுக்கு இடையில் மோதல் தொடர்கிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற 2021 மே 7ம் தேதி முதல் தற்போது வரை கூட்டுறவு துறையில் நடந்துள்ள முன்னேற்றம் சாதனைகள் குறித்த பத்திரிக்கை செய்தியை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 76 பக்கங்கள் உள்ள செய்திக் குறிப்பில் 2021 - 22 பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 27 மொத்த அறிவிப்புகளில் 26 நிறைவேற்றப் பட்டதாகவும் நடப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 25 மொத்த அறிவிப்புகளில் அனைத்திற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் தியாகராஜன் பேசியதற்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. 

Input From: Dinamalar

Similar News