கொஞ்சம் அசந்தால் அமைச்சர்களுக்கு பங்கம்: ஆளுநரிடம் இறங்கிப்போக தி.மு.க முடிவு? திடீர் திருப்பத்திற்கு காரணம்!
வரும் 26ம் தேதி குடியரசு தினம் வருகிறது. கவர்னர் தேசியக் கொடியேற்ற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை, தமிழக அரசு மேற்கொள்ளும். தேசியக் கொடியேற்ற வரும் கவர்னரை, முதல்வர் வரவேற்பது மரபு.
எனவே, கவர்னர்-தமிழக அரசு இடையே இணக்கமற்ற போக்கு நீடித்தால், குடியரசு தின விழாவும் சர்ச்சையாகும்.
இதை இரு தரப்பும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.எனவே, குடியரசு தினத்திற்குள் இணக்கமான சூழலை உருவாக்க, அரசு முயற்சித்து வருவதாகவும், அதை கவர்னர் தரப்பும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
.கவர்னருடனான மோதல், அரசு நிர்வாகத்தை முடக்கி விடும் என, சில மூத்த அதிகாரிகள், முதல்வரிடம் எடுத்து கூறியுள்ளனர்.
இரு தரப்பிலும் இணக்கத்தை ஏற்படுத்த, அவர்களும் முயற்சித்து வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் பயணமாக,டில்லி சென்ற ஆளுநர் ரவி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன், சட்டசபையில் நடந்த சர்ச்சை உள்ளிட்ட தமிழக நிலவரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
தி.மு.க., அமைச்சர்கள் பலர் மீது, ஊழல் புகார்கள், வழக்குகள் உள்ளன. மோதல் நீடித்தால், அமைச்சர்கள் மீது வழக்கு தொடர, கவர்னர் அனுமதிக்கலாம். அது நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் கொஞ்சம் இறங்கிப்போக முடிவு செய்துள்ளனர்.
Input From: Dinamalar