ஆளுநரிடம் சரணடைந்தாரா முதல்வர் ஸ்டாலின்?

Update: 2023-01-27 01:02 GMT

நாட்டின் 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு சென்றது. இதை ஆளுநருடன் பார்வையிட்ட ஸ்டாலின், பின்னர் வாகன அணிவகுப்பு மற்றும் அரசுத் துறைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். அணிவகுப்பை பார்த்துக் கொண்டே அவர்கள் ஒன்றாகப் பேசினர்.

மாலை கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட ஸ்டாலினுக்கு, கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக புறக்கணிக்கும் என பலரும் நினைத்தனர். ஆனால், தேநீர் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் ஆளுநரிடம் ஸ்டாலின் "சரணடைந்தார்" என விமர்சிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று கவர்னர், தி.மு.க., அரசு எழுதி கொடுத்த பல வார்த்தைகளை சேர்க்காமல் ஆளுநர் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் ஆளுநருக்கு கொலை மிரட்டல் எல்லாம் விடுத்தனர்.

இதையெல்லாம் தாண்டி குடியரசு தினத்தன்று ஸ்டாலி நடந்து கொண்ட விதம், ஆளுநரிடம் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டது போலத்தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

Input From: OneIndia


Similar News