'நானே இடுப்புவலியில இருக்கேன், என்கிட்ட தேசபக்தியா?' - எம்.பி.அப்துல்லாவின் குபீர் விளக்கங்கள்!

'நானே இடுப்புவலியில இருக்கேன் என்னை போய் குடியரசு தினம் விழாவிற்கு கூப்பிடுறீங்க' என்கிற ரீதியில் திமுக எம்பி அப்துல்லா

Update: 2023-01-28 06:08 GMT

'நானே இடுப்புவலியில இருக்கேன் என்னை போய் குடியரசு தினம் விழாவிற்கு கூப்பிடுறீங்க' என்கிற ரீதியில் திமுக எம்பி அப்துல்லா குடியரசு தின விழாவை புறக்கணித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவைச் சேர்ந்த எம்பி எம்எல்ஏக்களுக்கு என்ன ஆயிற்றோ என தெரியவில்லை சமீபகாலமாக பொதுவெளியில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் மக்கள் பார்த்து சிரிக்கும் அளவிற்கு இருக்கிறதே தவிர யாரும் பார்த்து 'ஆக என்ன ஒரு அரசியல் ஆளுமை' என வியக்கும் அளவிற்கு இல்லை. அந்த அளவிற்கு திமுக தலைவர்கள் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விட பொதுவெளிகளில் தாங்கள் தடுமாறும் அளவிற்கு நடந்து கொள்கின்றனர்!

ஒரு பக்கம் திமுக அமைச்சர் நாசர் என்றால் பொதுவெளியில் கல்லை எடுத்து அடிக்கிறார், இன்னொரு அமைச்சர் கே.என்.நேரு என்னவென்றால் பொதுவெளியில் தன் கட்சியினரை விட்டு வெளுக்கிறார், இன்னொரு அமைச்சரோ வாய்க்கு வந்தபடி எல்லாம் பொதுமக்களை பேசுகிறார்!

இது இப்படி இருக்கு தற்போது திமுகவைச் சேர்ந்த எம்.பி.எம்.எம்.அப்துல்லா நானும் வருகிறேன் பார் களத்தில் என தன் பங்கிற்கு குதித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்பொழுது மாவட்ட எஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் காவல்துறையினர் ஆகியோர் குடியரசு தின விழா சம்பிரதையாக கொண்டாட்டங்களை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எம்.பி எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோருக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் மக்கள் பிரதிநிதிக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்ட அதில் குளறுபடிகள் நடந்ததாக கூறி எம்.பி.அப்துல்லா பாதியில் நிகழ்ச்சி முடியும் முன்னரே கிளம்பினார். அதற்க்கு காரணமாக திமுக எம்பி எம் எம் அவர்கள் ஆயுதப்படை மைதானத்திற்கு வரும்போது அவர் பெயரில் இருக்கை சரியாக ஒதுக்கப்படவில்லை என சொல்லிட்டு விழா நடந்து கிட்டு இருக்கும்போதே குடியரசு தின அணிவகுப்பு மரியாதை ஏற்காமல் கார்ல கிளம்பி சென்றார்.


உடனே எம் எம் அப்துல்லா தரப்பு ஊடகங்களுக்கு குடியரசு தின விழாவில் எங்களுக்கு முறையான இருக்கை ஒதுக்கவில்லை அப்டின்னு சொன்னாங்க, அதுக்கப்புறம் ஒரு சிலர் வந்து குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு வந்தபோது அவசர அழைப்பு வந்தது அதனால் போக வேண்டியது சொல்லி சமாளிக்க பார்த்தாங்க ஆனா அடுத்தபடியாக சமூக வலைத்தளங்கள் அதிகமா விமர்சிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் இதை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்ததற்கு 'உங்ககிட்ட தான் என் நண்பர் இருக்கே உடல் நலக்குறைவு இருப்பதால் என்னால் வர முடியவில்லை குடியரசு தின நிகழ்ச்சியில் அதிக நேரம் அமர முடியாது சொல்லிவிட்டு கிளம்பினேன். புரளி கிளப்ப வேண்டாம்' எ அப்டின்னு சொல்லி எம்.எம்.அப்துல்லா ட்வீட் போட்ருந்தார்.


மேலும் இன்று இடுப்பு வலி காரணமாக எம்.எம்.அப்துல்லா வரவில்லை எனவும் செய்திகள் வருது. எப்படியோ குடியரசு தின விழாவின் முக்கியத்துவம் தெரியாமல் பாதியில் கிளம்பிவிட்டார், எதிர்க்கட்சிகள் குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோஷத்தை எழுப்பியவுடன் என்ன செய்தது என தெரியாமல் இடுப்பு வலி! அவசர வேலை! அப்டின்னு என்ன சொல்றோம் என தெரியாமலே எம்.பி புலம்புறதை மக்கள் வேடிக்கையாக பார்க்குறாங்க!

Similar News