'ஸ்டாலின்தான் வராரு! குக்கர் கொடுக்க போறாரு' - நம்ம தொகுதிக்கு எப்ப இடை தேர்தல் வருமோ என மக்களை ஏங்கவைக்கும் ஈரோடு கிழக்கு!
இதுவரை திமுக ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது, திமுக கூட்டணி தரப்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வரை பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். இப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆட்சியில் உள்ள அடுத்த மூன்று ஆண்டு காலத்தில் அரசியல் கட்டமைப்பை நிறுவுவதற்காக திமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும், எதிர்கட்சிகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக முழுமூச்சுடன் போராடி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகளில் கூட்டணி பலமாக இருப்பதாலும் மக்கள் மத்தியில் பின்னடைவை சந்திக்க வாய்ய்புகள் இருக்கின்றன என்ற உளவுத்துறை கொடுத்த ரிப்போட்டின் அடிப்படையிலும் திமுக எப்படியாவது இந்த தேர்தலில் ஜெயிச்சாக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறத்திலோ களத்தில் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி, அரசு ஊழியர்கள் மத்தியில் உள்ள கடுப்பு, டாஸ்மாக் கடை ஊழியர்கள் மத்தியில் உள்ள வெறுப்பு என திரும்பும் இடமெல்லாம் வெறுப்பை சம்பாதித்திருக்கும் திமுக அரசு நாம் வெற்றிபெற குறுக்கு வழியை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு பணம், சாப்பாடு என இதுநாள் வரை வாரி இறைத்த திமுக இன்று ஒருபடி மேலே சென்று குக்கர், கொலுசு வழங்க துவங்கியுள்ளது.