'அண்ணே அழகிரி அண்ணே! தம்பியை காப்பாத்துங்க' - அண்ணனிடம் சரண்டர் ஆகப்போகும் முதல்வர் ஸ்டாலின்
கட்சியில் அடுத்தடுத்து விரிசல்கள் விழத்துவங்கியுள்ளதால் தனது அண்ணணாகிய மு.க.அழகிரி அவர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கட்சி பற்றிய தகவல்களை கூறி சமாதானம் பேசத்தயாராகிவிட்டார் தகவல்கள் கிடைத்துள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகன்கள் ஒருவர் மு.க.அழகிரி மற்றொருவர் மு.க.ஸ்டாலின். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் கோலோச்சி அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந்தார். தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியிலிருந்த மு.க.அழகிரிக்கு கட்சியில் அவ்வளவு மரியாதை இருக்கும். இடைத்தேர்தல் என்றாலே அழகிரி, அழகிரி என்றாலே இடைத்தேர்தல் என்ற அளவிற்கு திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒரு பார்முலாவையே கண்டுபிடித்தார் மு.க.அழகிரி. இன்றைக்கு ஈரோட்டில் இடைத்தேர்தல் களம் எல்லாம் அன்றைக்கு திருமங்கலத்தில் அழகிரி வகுத்து வைத்த பார்முலாவில் தான் பயணிக்கிறது என்றால் அது மிகை ஆகாது.
அந்த அளவிற்கு அழகிரி திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார், பின்னர் சில காலங்களில் ஏற்பட்ட குடும்ப விரிசல் காரணமாக அழகிரி திமுகவிலிருந்து ஒதுக்க ஆரம்பிக்கப்பட்டார். பின்னர் மெல்ல மெல்ல மு.க.ஸ்டாலின் குடும்பம் திமுகவை ஆக்கிரமிக்க துவங்கியது, மு.க.அழகிரி திமுகவை விட்டு மெல்ல வெளியேற்றப்பட துவங்கினார். பின்னர் கருணாநிதி இறந்ததற்குப் பிறகு முற்றிலும் அழகிரி அரசியலை விட்டு ஒதுங்கினார். அவருடைய ஆதரவாளர்களும் பலர் அரசியல் இருந்தே விலகி விட்டனர், சிலர் மு.க.ஸ்டாலின் பக்கம் வந்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் மதுரை சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவான அழகிரி அவர்களை சந்தித்து விட்டு வந்தார். அவரைப் பார்த்தது மட்டுமல்லாமல் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அப்போது திமுக கட்சியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள விரிசல்கள், குறித்தும் திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிருப்தியாக இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது இப்படி இருக்கையில் அப்பொழுது மு.க.அழகிரி உதயநிதி சந்தித்து விட்டு வந்தது பரபரப்பாக பேசப்பட்டது, மேலும் திமுக இப்பொழுது இருக்கும் நிலைமையில் அழகிரியின் கண்டிப்பாக ஸ்டாலினுக்கு தேவைப்படும் என்றே தெரிகிறது.