ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிரச்சாரத்துக்கே வரமாட்டேங்குறார் இதுல ஜெயிச்சுட்டா சுத்தமா வரமாட்டார்! - ஈரோடு கிழக்கு அட்ராசிட்டிகள்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஓட்டு கேட்க கூட வருவதில்லை என மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்து வருகிறது, ஒருபுறம் மக்கள் மத்தியில் கட்சியினர் செய்யும் பிரச்சாரங்கள் சலசலப்பு, மறுபக்கம் கட்சியினர் கூறும் கருத்துக்கள் சலசலப்பு என இரு பக்கமும் வைரல் ஆகி வருகிறது ஈரோடு கிழக்கு.
எடப்பாடி பழனிச்சாமி ஆம்பளையா என கேட்ட விவகாரமும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் குறித்து பேசிய பேச்சும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. மேலும் உதயநிதியை அண்ணாமலை செங்கல் வைத்து செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இப்படி தினம் தினம் அரசியல் உலகில் கடும் சர்ச்சைகளை எழுப்பி வந்த ஈரோடு இடைத்தேர்தல் மேலும் ஒரு முக்கிய சம்பவமாக வேட்பாளர் பிரச்சாரத்திற்கே வர மாட்டேங்கிறார் என்ற சம்பவமும் அரசியல் உலகை அதிரவைத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி அங்கு காங்கிரஸ் கட்சியை போட்டியிட வைத்துள்ளது, ஏற்கனவே இறந்த திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் திருமகன் ஈவேரா அவர்களின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.
தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதிலிருந்து திமுகவின் உற்சாகம் சற்று குறைந்தபடியே காணப்பட்டது. மேலும் இந்த தேர்தலில் எப்பயாவது வெற்றி பெற வேண்டும் என்பதே ஒரே நோக்கத்துடன் திமுக வேலை செய்து வருவதால் கட்சியினருக்கு அது பெரிதாக தெரியவில்லை.