'ஏன் இவ்ளோ சவுண்டு திமுக தொரத்திவிட்ருச்சா? - அண்ணாமலை கேட்ட ஒரே கேள்வியால் கப்சுப் என பம்மிய திருமாவளவன்!

Update: 2023-03-04 08:48 GMT

அண்ணாமலை கொளுத்தி போட்ட காரணத்தினால் அலறி போய் தற்போது திருமாவளவன் 'அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க' என்ற ரீதியில் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழகத்துல இன்னைக்கு இருக்குற நிலைமைக்கு பாஜகவை நினைச்சு தூங்காம இருக்குறது அரசியல் தலைவர்கள் பட்டியல்ல திருமாவளவன் முதல் இடத்துல இருக்குறார். அந்த அளவிற்கு பாஜக குறிப்பாக அண்ணாமலை திருமாவளவன் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவன் போராட்டத்தை பத்தி அசால்ட்டா ஒரு வரில முடிச்சுட்டார். அண்ணாமலை என்ன சொன்னாருன்னா, 'திருமாவளவன் அண்ணன், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியில் வருவதற்கு ஒரு காரணத்தைத் தேடுகிறார். அவர் ஒரு புது அரசியலை ஸ்டாலின் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயல்கிறார். கூட்டணியிலிருந்து வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வாருங்கள். வெளியில் வருவதற்குக்கூட தைரியம் இல்லாமல் பேசுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணன் திருமா அவர்கள், வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வரலாம். சாக்குப் போக்கு சொல்வது ஏன் எனத் தெரியவில்லை. திட்டுவதற்கெல்லாம் ஒரு கூட்டமா அவர்களுடைய தோழர்களே ஒரு கடையை உடைத்துவிட்டு, மருத்துவமனையில் படுப்பதைப்போல் எல்லா கட்சிகளும் இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்' அப்டின்னு சொன்னாரு.

திருமாவளவன் சமூகநீதி, பட்டியலின மக்கள் உரிமை, பாசிச பாஜக அப்டின்னு கத்தி பேசினதெல்லாம் 30 செகண்ட்ல அண்ணாமலை சின்னாபின்னமாகிட்டாரு.

என்னடா நம்ம இப்படி மக்களை கூட்டி கத்தி பாஜகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துறோம் அதுக்கு கோவப்பட்டு பதில் அறிக்கை விடுறதுதானே உலக நியாயம்? அத விட்டுட்டு இப்படி நாம கூட்டணிக்குத்தான் கத்துறோம்ன்னு சிம்ப்ளிளா முடிச்சுட்டாரே அண்ணாமலை அப்டின்னு சுதாரித்துட்டு அடுத்து திருமாவளவன் ஜகா வாங்க ஆரமிச்சுட்டார்.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சில திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'திமுக கூட்டணி 2019 லிருந்து வலுவாக உள்ளது. ஆனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர். விடுதலை சிறுத்தை கூட்டணியில் இருந்து வெளியேற போகிறது என பஜக தலைவர் உட்பட சிலர் பேசிக்கொண்டு உள்ளனர். ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டி காட்டுகிறோம். ஆனால் எங்கள் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக தெளிவாக உள்ளோம். அகில இந்திய அளவில் திமுக கூட்டணி வலிமை பெற வேண்டும் என்பது எங்கள் நிலைபாடு' அப்டின்னு ஜகா வாங்கிட்டாரு.

நமக்கு கிடைத்த எம் பி சீட் எங்கே கூட்டணி மாறி சென்றால் கிடைக்குமா என்ற அச்சத்தில் இருக்கும் திருமாவளவனுக்கு அண்ணாமலை கேட்ட கேள்வி இது என்னடா வம்பாபோச்சு அப்டின்னு நினைக்க வச்சுடுச்சு. அரசியல் ரீதியாக திருமாவளவனுக்கு எங்கே அடித்தால் வலிக்கும் என நன்கு உணர்ந்த ஒரே தலைவராக தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கின்றார் என இப்பொழுதே பாஜகவினர் கூறி வருகின்றனர் அதற்கு தகுந்தார் போல் தான் அண்ணாமலை பேசியதற்கு தற்பொழுது திருமாவளவன் பம்மி பதில் அளித்துள்ளார்.

Similar News