'தம்பிகளா! கருணாநிதி நூற்றாண்டு விழா வருது கம்'முன்னு இருக்கனும்' - முதல்வர் ஸ்டாலினை புலம்பவிட்ட திமுக மூத்த தலைகள்!

Update: 2023-03-25 00:33 GMT

'யப்பா நிம்மதியா இருக்க விடுங்கப்பா' என மாவட்ட செயலாளர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்க்கட்சிகளால் திமுகவிற்கு பிரச்சனை வருகிறதோ இல்லையோ எதிர்க்கட்சிகள் கூட ஒரு சில விஷயங்களில் அமைதியாக போனாலும் ஆளும் கட்சியினரால் திமுக கடும் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தற்பொழுது முதல்வர் அமைதியா இருங்கப்பா என கேட்கும் அளவிற்கு பிரச்சினை அதிகமாகி விட்டது, குறிப்பாக திமுகவின் மூத்த தலைவர்கள் என சொல்லப்படும் துரைமுருகன், பொன்முடி, எ.வா.வேலு, ஆ.ராசா, கே.என்.நேரு போன்றவர்கள் ஆட்சிக்கு வந்த சந்தோசத்தில் மக்கள் மத்தியில் பேசும் அனைத்து விஷயங்களும் பேசுபொருளாக மாறிவிட்டன! அமைச்சர் நாசர் கல்லை எடுத்து அடிப்பது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மனு கொடுக்க வந்து பெண்ணின் தலையில் தட்டுவது, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அமைச்சர் சேகர்பாபு கோபப்படுவது, அமைச்சர் கே.என்.நேரு ஆட்களை வைத்து சொந்த கட்சி எம்.பி'யான திருச்சி சிவா வீட்டை தாக்குவது என இவர்கள் எல்லாம் ஆங்காங்கே ஒரு செயல்கள் செய்தால், நீங்கல்லாம் என்னப்பா ஜுஜுபி நான் பண்றேன் பாரு சம்பவம் என வாரம் ஒரு செயலை செய்து இவர்கள் எல்லாவற்றையும் ஜஸ்ட் லைக் தட் என ஓரம் கட்டி விடுகிறார் மூத்த அமைச்சர் பொன்முடி.


'ஓசிலதானே போறீங்க!' என ஒரு பக்கம் பெண்களை மேடை போட்டு கேட்பதும், 'எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டிங்க பாரு' என அடுத்த வாரமே பொதுமக்களை செல்லமாக திட்டுவதும் என ரவுண்டு கட்டி அடிக்கிறார், இது இவ்வளவுதானா என நினைப்பதற்குள் 'இருங்க பாஸு இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு' என கூறும்விதமாக 'அய்யா எங்க ஏரியாவுல பிரச்சினை இருக்கு' என கூறிய மூதாட்டியிடம், 'என்ன புருஷன் இருக்கானா போய்ட்டானா? எப்படி இருப்பான்?' என அமைச்சர் பொன்முடி கேட்டது திமுக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சம்பவம்.


இப்படி மொத்தமாக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தூக்கமே இல்லாத அளவிற்கு கொண்டு போய் நிறுத்திவிட்டனர் திமுக மூத்த தலைவர்கள்! ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த திமுகவினர் கூட்டத்தில் 'ஏற்கனவே எனக்கு தூக்கம் வரவில்லை, ஏன் இப்படி செய்கிறீர்கள்! உங்களை நினைத்தால் எனக்கு நிம்மதி இல்லை! தினமும் தூங்கப்போகும் போது இன்னைக்கு என்ன செய்து வைத்தார்களோ என நினைத்து தூக்கமே வரமாட்டேங்குது' என முதல்வர் ஸ்டாலின் பொதுவெளியில் அதுவும் மேடையில் புலம்பியதையே திமுகவினர் மறந்து விட்டனர்.


அப்படி முதல்வர் ஓப்பனாக புலம்பியும் பயனில்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது திமுகவிற்கு!


இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக மாவட்ட செயலாளார் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றிக்கு பாடுபட்டவர்களை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கேட்டுக்கொண்டார். அடுத்தபடியாக அவர் வேறு எதுவும் பேசவில்லை முக்கியமாக பேசியது திமுகவினர் அத்துமீறல் சம்பவங்களைத்தான், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, 'தான் தலைமையில் அறிவுறுத்தல்களையும் மீறி பல வருத்தம் தரும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன இது கண்டிக்கத்தக்கது. நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் வேலைகளை செயல்படாமல் இருக்க வேண்டும்.


மாவட்ட செயலாளர்கள் இதனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் சமயத்தில் இது போன்ற அத்துமீறல்கள் நமக்கு மிகுந்த கெட்டபெயர் ஏற்படுத்திவிடும் என பேசியுள்ளார்.


‘கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒரு ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணிகளை இப்பொழுதே துவங்க வேண்டும் அதை விட்டுவிட்டு ஆங்காங்கே அத்துமீறல்களில் ஈடுபடுவது, செய்திகளில் தவறான பெயர் அடிபடுவது என இப்படி கட்சிக்கு அமப்படுத்தும் அவப்பெயர் ஏற்படுத்த வேலைகளை செய்யாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்' என முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் மத்தியிலும் பேசியுள்ளார்.


முதல்வர் ஸ்டாலினே இப்படி இறங்கி வந்து 'அமைதியாக இருங்கப்பா உயிரை வாங்காதீங்க' என்ன பேசியது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News