கனிமொழிக்கு வந்த தகவலால் அலறி அடித்துக் கொண்டு தூத்துக்குடி பறந்துள்ளார்.
இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான தேர்தல் வரவிருக்கிறது, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைத்து அரசியல் கட்சிகளாலும் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கூற வேண்டும் என்றால் தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் தரப்பில் உள்ளது, அதே சமயத்தில் அதிமுக-பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக அமைந்துள்ளன. வரும் தேர்தலில் எப்படியும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிவிடுவார் என கருத்துக்கணிப்பு முடிவுகள் மட்டுமல்ல கள நிலவரங்களும் இப்பொழுது கூறுகின்றன.
இந்த நிலவரம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்கு புரிந்து விட்டது, இது மட்டுமல்லாது தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஒபி ரவீந்திரநாத் அவர்கள் மட்டுமே வெற்றி பெற்றார். பாஜக கூட்டணிக்கு தேனி தொகுதி மட்டுமே கிடைத்தது. மற்ற 38 தொகுதிகளுமே திமுக கூட்டணி வசம் சென்ற இது பாஜகவுக்கு மிகப்பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
தமிழகம் பெரியார் மண், தமிழகம் மோடியை ஏற்றுக் கொள்ளாது, தமிழகத்தில் மோடி எதிர்ப்பு என்பது மக்களின் எண்ணத்தில் ஊறியிருக்கிறது என இந்த வெற்றியின் மூலம் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடத்தில் இதனை கருத்தாகவே மாற்றினர். தமிழ் மக்களுக்கு மோடியை பிடிக்காது, தமிழகத்திற்கு தேவை தமிழக பாரம்பரியத்தை பின்பற்றக் கூடிய ஆட்சியாளர்கள் தான் என்கின்ற ரீதியில் இந்த வெற்றி குறித்து அவ்வபோது பரவலாக பேசப்பட்டது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது, குறிப்பாக கூற வேண்டுமென்றால் தமிழகத்தில் பிரதமர் மோடி எதிர்ப்பு அலை என ஒன்று தற்போது இல்லாமலே போகிவிட்டது. மேலும் தமிழக மக்கள் பாஜகவிற்கு உறுப்பினர்களை கொடுக்கவில்லை என்றாலும் தமிழகத்திற்கு செய்ய வேண்டியவற்றை பிரதமர் மோடி சிறப்பாக செய்துவிட்டார் என்றே கூறலாம்.
சாலை வசதிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கும் குடிநீர், கொரோனா காலங்களில் வழங்கப்பட்ட இலவச ரேஷன் அரிசி, மோடி வீடு எனக் கூறப்படும் கிராமப்புற ஏழை எளிய குடிசை வாழ் மக்களுக்கு சிமெண்ட் வீடு, விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வருடத்திற்கு நிதி, மேலும் செல்வமகள் சிறு சேமிப்பு திட்டம் மூலம் வசதி இல்லாத பெண்கள் வருங்காலத்தில் படிப்பதற்கும் அவர்கள் திருமணத்திற்கும் வரும் செலவுகளை சமாளிக்க சேமிப்பு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் இப்படி பல மத்திய அரசு திட்டங்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பயனாளர்கள் அதிகம் என அறிக்கை கூறுகிறது. அந்த அளவிற்கு தமிழகத்தில் பிரதமர் மோடி வழங்கிய திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களுக்கு கொண்டு சேர்ந்துள்ளது, அதே சமயம் தமிழக பாஜக கடந்த 2019 தேர்தலை சந்தித்த பொழுது இருந்த பாஜக இப்பொழுது இல்லை கடந்த 2019 தேர்தலை சந்தித்தபோது தமிழக பாஜக இருந்ததை விட இப்போது ஐந்து மடங்கு அதிகமாகவே வளர்ந்து விட்டது.