ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிவிட்டு - ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் தசமபாகம் கேட்ட பாதிரியார்கள்! வெளிவரும் பரபர தகவல்கள்

Update: 2023-04-07 13:18 GMT

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பாதிரியார்கள் போராட்டத்தை தூண்டி விட்டுட்டு, ஸ்டெர்லைட் ஆலையிடம் டீல் பேசிய விவகாரம் தற்போது வெளியில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா, தூத்துக்குடியில் 1997-ல் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் தொடங்கி, கடந்த 21 ஆண்டாக இயங்கி வந்தது. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் உற்பத்தித்திறனுடைய இந்த ஆலை, இது போக, தூத்துக்குடி துறைமுக வருவாயில் 12 சதவிகிதத்தையும், சல்பியூரிக் ஆசிட் தேவையைப் பூர்த்தி செய்வதில் 95% கொண்ட முக்கிய நிறுவனமாகவும் ஸ்டெர்லைட் ஆலை இருந்தது. தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவில் தாமிர உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக இருந்தவை வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும், பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ ஆலைகளும்தான்.

உலகிலேயே ஏழாவது மிகப்பெரிய தாமிர உருக்காலையாக இருந்தது. கடந்த 15 ஆண்டுக்கும் மேலான சட்டப் போராட்டம், மக்கள் போராட்டமும் இணைந்து இந்தியாவில் சக்தி வாய்ந்த ஒரு தொழில் குழுமத்தின், உலகின் மிகப் பெரிய ஆலையை இழுத்து மூட வைத்துள்ளது. இப்பொழுது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், தேவையைவிட உற்பத்தி குறைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் நேரடியாக 5,000 பேரும், மறைமுகமாக 12,000 தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்றுவந்தனர். இது தவிர, 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றுவந்தனர். ஆலையை நம்பி தினசரி 800 முதல் 1,000 லாரிகள் வரை இயங்கி வந்தன.

தூத்துக்குடி துறைமுகத்தின் மொத்த சரக்கு கையாளுதலில் 20 - 25% ஸ்டெர்லைட் ஆலைக்கான காப்பர் சான்ட்தான். ஆஸ்திரேலியாவில் இருந்து ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் டன் காப்பர் சான்ட் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தமிழகத்துக்கு ஒரு வருடத்துக்கு செலுத்தப்படும் வரிகளின் மொத்த மதிப்பு ரூ.1,400 கோடி. 2017-2018-ம் நிதியாண்டில் இந்தியாவின் காப்பர் ஏற்றமதி 419 கிலோ டன்னாக இருந்த நிலையில், தற்போது 2022-ம் நிதியாண்டில் 87 கிலோ டன்னாகக் குறைந்துள்ளது.

இப்படி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பெருமளவில் ஒரு கிராமம் ஈடுபட்டதன் பின்னணியில் சதி நடந்தது எனவும், ஸ்டெர்லைட் ஆலை இயங்கினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என தவறான பிரச்சாரம் செய்து அங்கு கிராம மக்களை தூண்டிவிட்டு அதன் மூலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் ஸ்டெர்லைட் ஆலையிடம் டீல் பேசிய விவகாரமும் தற்பொழுது வெடித்துள்ளது. இந்த பக்கம் மக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டு அந்த பக்கம் ஸ்டெர்லைட் ஆலையிடம் டீல் பேசினார்கள் பாதிரியார்கள் என்ற தகவல் தற்பொழுது அம்பலமாகி உளது.

தனியார் யூ ட்யூப் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரெட் பிக்ஸ் பேட்டி அளித்தவரின் ஸ்டெர்லைட் ஆலை போராளி ஒருவர் கூறியதாவது, 'கிறிஸ்தவ பாதிரியார்கள் தசமபாகம் என்ற பெயரில் எங்கு எந்த நிவாரணம் கிடைத்தாலும் சரி, எந்த போராட்டத்தில் கிடைத்த செய்தாலும் சரி அங்கு வந்து அவர்கள் பஞ்சாயத்து பேச துவங்க அரமித்துவிட்டனர். தென் மாவட்டங்களில் அவர்களது ஆதிக்கம் அதிகமாக இருக்கின்றது, குறிப்பாக ஸ்டெர்லைட் விவகாரத்தில் கூற வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் விவகாரத்தில் கிராம மக்களை தூண்டி விட்டதும் அவர்கள் தான், ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் சென்று டீல் பேசியதும் அவர்கள் தான். அங்கு தசம பாகத்திற்காக அவர்கள் டீல் பேசுவார்கள் பேசி அந்த பணத்தையும் வாங்கிக்கொண்டு அவர்கள் அரசியல் செய்து வந்தனர். கிறிஸ்தவ பாதிரியார்கள் என்ற பெயரில் ஒரு பக்கம் நாடார்கள் முகமூடியை வைத்துக்கொண்டு, மறுபக்கம் மதத்தின் முகமூடி வைத்துக்கொண்டு இவர்கள் அதிக அளவில் தென் மாவட்டங்களில் ஊடுருவ துவங்கி விட்டார்கள் என கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டர் பதிவில் மிஷனரிகள் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அம்பலமாகியுள்ளது என பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி வேறு, '"ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டனர்'என கூறியது வேறு குறிப்பிடத்தக்கது. இப்படி கிறிஸ்தவ மதத்தைக் கொண்டு பாதிரியார்கள் தென் மாநிலங்களில் பல்வேறு அரசியல் செய்து வருவது பற்றி தகவல்கள் கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Source - Redpix interview, Arjun sampath tweet, Governor speach

Similar News