யப்பா இத்தனை லட்சம் கோடியா? - அண்ணாமலை வெளியிடப்போகும் ஊழல்வாதிகள் யார் தெரியுமா?
அண்ணாமலை வெளியிட்ட ஒற்றை வீடியோ தமிழக அரசியலை தற்பொழுது புரட்டிப்போட துவங்கிவிட்டது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் எனவும், சொத்து பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும் எனவும் கூறினார். பாஜகவின் இணையதளத்தில் அனைத்து ஆதாரங்களும் வெளியிடப்படும் என்றும் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஒரு முன்னோட்ட விடியோவை அண்ணாமலை இன்று காலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அந்த 10 செகண்ட் வீடியோவில் கிட்டத்தட்ட திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் அணைத்து குடும்ப உறுப்பினர்களும் இருக்கிறார்கள். DMK Files என பெயரிடப்பட்ட அந்த விடியோதான் இப்பொழுது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரல்.
அண்ணாமலை நாளை வெளியிடப்போகும் அந்த வீடியோவில் திமுக குடும்பம் அரசியலில் சம்பாதித்து துபாயில் செய்த வணிகம், அயல்நாடுகளில் குவித்துவைத்த சொத்து, மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் கட்டாயம் இடம்பெறும் அப்டின்னும், இது எல்லாத்தையம் சேர்த்தால் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடியாக இருக்கும் அப்டின்னும் அண்ணாமலை ஏற்கனவே சொல்லிட்டார்.
நாளைக்கு அண்ணாமலை வெளியிடப்போகும் ஊழல் பட்டியலில் அவர் பெயர் இருக்குமோ? இவர் பெயர் இருக்குமோ? அவர் இருப்பாரோ? இவர் இருப்பாரோ? அப்டின்னு இன்னைக்கே பேச அரமிச்சுட்டாங்க, இந்த வீடியோ இப்ப அறிவாலய தரப்புல ரொம்ப அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கு. இது மட்டுமல்லாம அண்ணாமலை இந்த பட்டியலை வெளியிட்டா அதை மக்கள் மத்தியில அதிகம் பேசாம இருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் அப்படின்னு ரொம்பவே திமுக தரப்புல இப்ப யோசனைல இருக்காங்க!