சிபிஐ வசம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் - இனி சிபிஐ ஆடப்போகும் ரைடு தாண்டவம்!
அண்ணாமலை வெளியிட்ட புகாரின் காரணமாக சிபிஐ தமிழகத்தில் தொடர்ச்சியாக சம்மன் அனுப்பும் என்ற அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் பல சர்ச்சைகளை மட்டுமல்லாது பல விவாதங்களை முன்வைத்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் 27 பேரின் சொத்து பட்டியல், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். தாம் வெளியிடும் தகவல்களை தமிழ் மக்கள் புத்தாண்டாக கொண்டாடுவார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அதன்படி, ஏப்ரல் 14-ம் தேதி காலை 10.15 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்து பட்டியல் ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், மைத்துனர் கலாநிதி மாறன் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துப் பட்டியல் மற்றும் தி.மு.க. அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, துரைமுருகன், பொன்முடி, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் கனிமொழி, ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். இதன்படி, தி.மு.க.வின் சொத்து மதிப்பு 1,31,000 கோடி ரூபாய் என்று அண்ணாமலை தெரிவித்தார் அதனை தொடர்ந்து, அண்ணாமலை அவர் கட்டியிருக்கும் ரஃபேல் கைக் கடிகாரத்தின் பில்லையும் வெளியிட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர்களின் சொத்துப் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அண்ணாமலை தற்பொழுது வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அனைத்து கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் வரிசையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறிய கருத்து ஒன்று அனைவராலும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, 'அண்ணாமலையை இவர்கள் அனைவரும் காமெடியாகவும், கோமாளியாகவும், மக்கு மலை என்றும் பேசிக் கொண்டிருக்கின்றனர்! ஆனால் அண்ணாமலை என்பவர் அண்ணாமலை கிடையாது அவர் ஒரு மாஸ்க், அண்ணாமலை பின்னணியில் உள்ளது ஆர் எஸ் எஸ். இது எல்லாம் அவராக தயார் செய்து சொல்வதற்கு அவர் ஒன்றும் முட்டாள் கிடையாது அவர் ஒரு ஐபிஎஸ் ஆபிசர், படித்தவர், சர்வீஸில் இருந்தவர். இப்பொழுது இந்த விவகாரத்தை முன் வைத்துள்ளார்.