நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜரின் பதவி பறிக்கப்படுகிறது என தகவல் கிடைத்துள்ளது.
அண்ணாமலை வெளியிட்ட திமுக ஒன்னரை லட்சம் கோடி ரூபாய் சொத்து பட்டியல் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் திமுகவின் அமைச்சரவையில் இருந்தே நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அந்த ஆடியோவில் உதயநிதியும், சபரீஷனும் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டிற்குள் தங்கள் வருமானத்தை விட அதிக பணத்தை ஈட்டி உள்ளனர் இப்போது அது ஒரு பிரச்சினையாகி வருகிறது, உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சம்பாதித்து வைத்துள்ளனர் அதை எப்படி கையாளுவது, கணக்கு காட்டுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர் என பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு பத்திரிகையாளரிடம் கூறும் ஆடியோ வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆடியோவை மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் வெளியிட்டதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேறு, 'பாருங்கள் நான் வெளியிட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து பட்டியல் மட்டுமல்ல முப்பதாயிரம் கோடி ரூபாய் வேறு பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள் இந்த தகவலை வேறு யாரும் அல்ல திமுகவின் அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் கூறுகிறார். அந்த அளவிற்கு இருக்குறது திமுகவின் ஆட்சி' எனவும் கூறினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, இந்த ஆடியோ பதிவு வெளியானது முதல் திமுகவின் சக அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் மேல்மட்டத்தில் உள்ள அனைவரின் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஆடியோவில் உள்ளபடி அமைச்சர் தியாகராஜன் பேசியது உண்மைதானா? அவருடைய குரல் தானா என முதலில் சந்தேகங்களை எழுப்பிய திமுகவினர் பின்னர் தங்களுக்கு வேண்டியவர்களிடம் அந்த ஆடியோ பதிவை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அமைச்சர் தியாகராஜன் சபரீசன் உறவினர் என சொல்லப்படுகிறது ஆனால் அவரைப் பற்றி தியாகராஜன் அப்படி பேசியிருப்பாரா? அப்படியே பேசினாலும் அந்த உரையாடலின் ஆரம்பம் என்ன முடிவு என்ன என்பது தற்பொழுது வெளியாகவில்லை என திமுகவில் தற்போது பல கேள்விகள் எழுந்து வருகின்றது. இது எல்லாவற்றிற்கும் மேலாக ஆடியோ வெளியானது முதல் அந்த ஆடியோவை பற்றி இதுவரையில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்து வருவதும் இந்த ஆடியோவை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.