மாட்னாருய்யா பிடிஆரு - ஆடியோ டேப் விவகாரத்தில் பி.டி.ஆர் சிக்கியதற்கு குத்தாட்டம் போடும் திமுக மூத்த அமைச்சர்கள்
பி டி ஆர் ஆடியோ விவகாரம் வெளியாகிய முதல் திமுகவில் இருக்கும் பிற அமைச்சர்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து, கிட்டத்தட்ட 60 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இந்த அளவிற்கு சொத்து குவித்ததாக எந்த கட்சியும் பெயர் எடுத்தது கிடையாது, அந்தப் பெயரை திமுகவிற்கு அண்ணாமலை தற்பொழுது வாங்கிக் கொடுத்துள்ளார். குறிப்பாக அண்ணாமலை தகுந்த ஆதாரங்களுடன் எவ்வளவு ரூபாய் யார் யார் பேரில் உள்ளது? அது எந்த வகையான சொத்தாக உள்ளது? எங்கு இருக்கிறது? எந்த நாட்டில் இருக்கிறது அதன் மதிப்பு எவ்வளவு என துல்லியமாக வெளியிட்ட விவகாரம் தான் தற்பொழுது தமிழக அரசியலையே புரட்டிப் போட்டு வருகிறது.
இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட புகார் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள், அண்ணாமலை என்ன அண்ணாமலை நான்தான் பெரிய மலை என என்கின்ற ரீதியில் வெளியான நிதியமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ தான் தமிழக அரசியலில் எரிமலையாக வெடித்துள்ளது. குறிப்பாக இந்த ஆடியோ வெளியான பிறகு தான் அறிவாலயம் ஆட்டம் கண்டது என அனைவரும் கூறும் அளவிற்கு ஓர் ஆடியோ வெளியானது, அதுதான் பி டி ஆர் ஆடியோ. உதயநிதியும் சபரிசனம் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை சேர்த்து வைத்துள்ளார்கள், இது அவங்க தாத்தா காலத்திலேயே இந்த அளவுக்கு சேர்த்தது கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த பணத்தை இப்போது சேர்த்து வைத்து எங்கு முதலீடு செய்வது? எப்படி பதுக்குவது? என தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர். நல்லவேளை நமக்கு அந்த தொந்தரவு இல்லை' என நிதியமைச்சர் பி.டி.ஆர் அசால்டாக பத்திரிகையாளர் அவர்களிடம் கூறும் அந்த ஆடியோ வெளியானது முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் வெளிவந்து கிட்டத்தட்ட மூன்று தினங்கள் கடந்த பிறகும் இந்த விவகாரம் தரப்பொழுது தமிழக அரசியல் இன்னும் சூடு குறையாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ விவகாரத்தில் சிக்கிய காரணத்தினால் திமுகவின் மற்ற அமைச்சர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்ற சில தகவல் விசாரித்த பொழுது நல்ல வேலை பி.டி.ஆர் மாட்டினார், மாட்டட்டும் இதுதான் நமக்கு நல்லது என சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.