உடன்பிறப்புகளே எங்கேயும் வாய் திறக்க வேண்டாம் - அறிவாலயம் போட்ட அதிரடி உத்தரவு
என் பெயரை சொல்லியும் கொள்ளையடிச்சுட்டாங்களே! என்று அமைச்சர் துறைமுருகன் புலம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக என்றாலே மக்கள் மனதில் இனி ஊழல் விவகாரமே ஞாபகத்துக்கு வரும் அளவிற்கு அக்கட்சியில் நடந்த பல ஊழல் விவகாரங்கள் அவர்களின் கட்சியினராலயே வெளிவந்துள்ளது. முதலாவதாக முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து விவரங்கள் முப்பதாயிரம் கோடி அவர்கள் சிறுக சிறுக சேர்த்து இப்படி பெருமளவில் சேர்ந்து விட்டது. இதை எப்படி பாதுகாப்பது மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்று திமுக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் புலம்பிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவின் தீ அமர்வதற்குள்ளேயே பி டி ஆரின் மற்றொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ இதற்கு முன்னதாக வெளியான ஆடியோவில் சற்று நீளமாக இருந்தது
மேலும் அந்த ஆடியோவில் திமுக மற்றும் பாஜகவிற்கு இடையே உள்ள வித்தியாசத்தையும் ஒரு மனிதனுக்கு ஒரு பொறுப்பு என்ற கொள்கையை கடைப்பிடிப்பதிலேயே பாஜகவை எனக்கு பிடிக்கும். மேலும் இங்கு மொத்த கட்சியாக முதல்வரின் மகன் மற்றும் மருமகனே உள்ளனர் என்று அவர் புலம்பிய ஆடியோ வெளியாகி சாதாரண தீ திமுகவில் காட்டு தியாகப் பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
முதல் ஆடியோ வெளியானதுமே பாஜக அந்த ஆடியோவில் உள்ள உண்மை தன்மையை அறிந்து நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து தி ஸ்கொயர் மற்றும் திமுகவிற்கு நெருக்கமான ஐம்பது இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். 4 நாட்களாக நடைபெறும் இந்த ரெய்டு முடிவடையாத நிலையில் மற்றொரு திமுக அமைச்சர் தன் வாயிலே ஒரு ஊழல் புகாரை வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட காட்பாடி தொகுதியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் துறைமுருகன், கடும் கொந்தளிப்பில் ஒன்றை கூறியுள்ளார். அதாவது அவருடைய பெயரை சொல்லி அவரது தயவிலேயே வந்த சர்க்கரை ஆலை வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள், அப்படி கொள்ளை அடிப்பவர்களை இன்னும் ஒரு மாதத்திலும் அல்லது ஒன்றரை மாதத்திலோ கம்பி எண்ண வைப்பேன் என்று தனது கோபத்தை எச்சரிக்கையாக விடுத்துள்ளார். இப்படி தன்னுடைய பெயரை சொல்லியே பல கொள்ளைகளை அடித்துக் கொண்டிருக்கும் அவர்களை சும்மா விட போவதில்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் கொந்தளிப்புடன் பேசியிருக்கிறார்.