கருணாநிதி போல் அரசியல் வேலையை காட்ட நினைத்த கனிமொழி - அசால்ட்டாக தூக்கி அடித்த அண்ணாமலை
தமிழ் தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்ய முற்பட்ட கனிமொழிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.
தமிழகத்தில் தற்போது பல இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடைபெற்று வருகிறது. அந்த ரெய்டில் திமுக எம்எல்ஏ, முதலமைச்சர் மகனின் நெருங்கிய நண்பன், மருமகனின் நெருங்கிய நண்பர்களின் வீடும் அடங்கும் இப்படி திமுகவில் நடைபெற்ற ஊழலை பற்றி வருமானவரித்துறையினர் ரைடு நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், திமுக இந்த விஷயத்தை மக்களிடம் இருந்து மடை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதாவது செய்ய வேண்டுமே என யோசித்துக் கொண்டிருந்தது. இதற்கு முன்னதாக எப்பொழுதுமே இது மாதிரி ரெய்டு நடக்கும் வேலைகளிலும், மக்கள் மத்தியில் திமுகவிற்கு கெட்ட பெயர் ஏற்படும் வேலையிலும் தமிழ் மொழி, தமிழ் மொழி பற்று, தமிழ் மொழி அவமதிப்பு போன்ற விவகாரங்களை தான் கையில் எடுத்து அரசியல் செய்வார்கள் திமுக தலைவர்கள்.
திமுகவினரின் இந்த நடவடிக்கைகள் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் இருந்தே வழக்கமாக இருந்துள்ளது, இதன் காரணமாகவே தற்போது பாஜகவில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்து கனிமொழி அரசியல் செய்ய நினைத்தார்.
வருகின்ற மே பத்தாம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அதில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பாஜக களத்தில் மிக வேகமாக வேலை செய்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகா தேர்தலில் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் பல பிரச்சாரங்களை கர்நாடகாவில் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு புறநகர், மைசூர், சாம்ராஜ்நகர், சிவமெக்க போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து மக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலமும் தனது நேரத்தை மிச்ச படுத்தி இந்த தேர்தலுக்காக தங்களது வாக்குகளை சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைவு கூட்டம் சிவமெக்க என் இ எஸ் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக பாஜக தலைவர்களும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் தமிழ் அமைப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் என்பதால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது, ஆனால் இப்பாடலை நிறுத்தும்படி கர்நாடக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார். இதனை அடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடலை யாராவது பாடுங்கள் ஆனால் இசைக்க வேண்டாம் என அண்ணாமலை மேடையில் இருக்கும் போது கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு கன்னட வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த நிகழ்வை திமுக எம்பி கனிமொழி தனது கையில் எடுத்து, தமிழ் தாய் வாழ்த்து இழிவுபடுத்தும் தன்னுடைய கட்சிக்காரர்களை தடுக்க முடியாத அண்ணாமலை அவர்கள் தமிழ் மக்களை பற்றி எப்படி கவலைப்படுவார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் அதனைத் தொடர்ந்து #apologies Annamalai " என பதிவிட்டு தனது அரசியலை செய்ய ஆரம்பித்தார் கனிமொழி.