ஐயா என்னை அமைச்சர் பதவிலேர்ந்து மட்டும் தூக்கிடாதீங்க! - முதல்வரிடம் சரணடைந்தாரா பிடிஆர்?

Update: 2023-05-02 02:04 GMT

முதல்வரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டாரா பழனிவேல் தியாகராஜன்?

சமீபகாலமாக திமுகவின் ஆட்சி மட்டுமல்ல திமுக கட்சியிலும் பெரும் ஆட்டம் காணும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. அதில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய விவகாரமாக பிடி ஆரின் ஆடியோ விவகாரம் கருதப்படுகிறது. முதலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய 26 நொடிகள் கொண்ட ஒரு ஆடியோ வெளியானது இதனை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் முதல்வரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் ஒரு வருடத்திற்குள்ளே 30 ஆயிரம் கோடி சொத்துக்களை குவித்து வைத்துள்ளதாக அவர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிறகு பி டி ஆர் இந்த ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல் அல்ல எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று மறுத்தார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைமை குழு ஆளுநர் ஆர்.என் ஏவி யிடம் நேரில் சென்று பி டி ஆரின் ஆடியோ விவகாரம் குறித்து சுதந்திரமான தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த மறுநாள் அதிகாலையிலேயே ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான இடங்கள் உள்ளிட்ட ஐம்பது இடங்களில் வருமான வரித்துறையினர் தனது ரெய்டு நடவடிக்கையை தொடங்கினர். பின்னதாக பிடிஆர் பேசியது போன்று மற்றொரு ஆடியோவும் வெளியானது. இந்த ஆடியோ இதற்கு முன்னதாக வெளியான ஆடியோவிட சற்று அதிக நீளமாக இருந்தது. மேலும் அதில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவின் ஆட்சி செய்யும் விதத்தையும், கட்சி நடத்தும் விதத்தையும் பாராட்டி அது சரி என்பதையும் தெரிவித்திருந்தார். மேலும் திமுக கட்சியில் நடைபெறும் செயல்பாடுகளையும் முதல்வர் மகன் மற்றும் மருமகன் மட்டுமே கட்சியாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இறுதியாக என்னை பதவியில் இருந்து நீக்கினால் அதனால் ஏற்படும் முழு பாதிப்பும் அவர்களுக்கே என்றும் தெரிவித்திருந்தார்.

இப்படி நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது இரண்டு ஆடியோக்களிலும் முதல்வரின் மகன் மற்றும் மருமகன் மற்றும் தனது கட்சியைப் பற்றியே தவறாக கூறியதால் திமுக கட்சியிலேயே இவருக்கு பலத்தை எதிர்ப்புகளும் பெரும் பிரச்சனைகளும் ஏற்பட்டது. மேலும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படலாம் எனவும் அந்த பொறுப்பிற்கு தங்கம் தென்னரசு நியமிக்கப்பட உள்ளார் எனவும் தகவல்களும் வெளியானது. இந்த நிலையில் பி டி ஆர் பேசிய ஆடியோக்கள் இன்னும் பல உள்ளது அதுவும் விரைவில் வெளியாகும் என்று கமலாய தரப்புக் கூறியதிலிருந்து பி டி ஆர் பெரும் பயத்தில் இருந்திருக்கிறார் அதனை தொடர்ந்து முதல்வர் குடும்பத்தை நான் மதிக்கிறேன் மேலும் உதயநிதியை நான் தான் அமைச்சராக்க வேண்டும் என்று கூறினேன் அதோடு சபரீசன் எனக்கு வழிகாட்டி போன்றவர் என்று விளக்கி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

இந்த நிலையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது அதற்கு முன்னதாக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வரை இன்று சந்தித்துள்ளார், மேலும் இந்த சந்திப்பில் வெளியான ஆடியோ விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்ததாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. அதோடு இந்த சம்பவம் குறித்து பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் இடம் மன்னிப்பு கேட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் இந்த சந்திப்பு நிதியமைச்சர் பதவியில் இருந்து தன்னை தூக்க வேண்டாம் என கூறுவதற்காக இருக்குமோ என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News