தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் போது தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பாஜக தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். விவசாயிகள், இளம் வயது சாதனையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோரை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. கர்நாடக தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற பின்னர், தமிழகம் வரும் அண்ணாமலை, ஜூன் முதல் வாரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அண்ணாமலை, பிறகு அடுத்தடுத்த இடங்களுக்கு செல்வார்.
இதற்கான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியாக உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் வரவேற்பினை பொறுத்த தி.மு.க., பைல்ஸ் அடுத்தடுத்த பட்டியல் வெளியாகும். இந்த பயணம் முழுக்க அண்ணாமலை தி.மு.க.,வின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்வார். தி.மு.க.,வின் ஊழல் பற்றி அதிகம் பேசுவார். ஊழலுக்கு எதிராக மக்களை திரட்டுவார் என பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர்.
Input From: Dinamalar