ஆருத்ராவும், திமுக அமைச்சர்களும் - திமுகவை சம்பவம் செய்யப்போகும் அண்ணாமலை!

Update: 2023-05-15 02:26 GMT

ஆருத்ரா ஆயுதத்தை எடுத்து திமுகவை சம்பவம் செய்யும் அண்ணாமலை

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமை இடமாகக் கொண்டு திருவண்ணாமலை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தது. இந்த தனியார் நிறுவனம் சமீப காலங்களாக தங்களிடம் டெபாசிட் செய்யப்படும் பணங்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. அதன்படி தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து மக்களின் ஆசையை தூண்டி உள்ளனர். இதனால் ஆருத்ரா நிறுவனம் கூறியது உண்மை என்று நம்பி கிட்டத்தட்ட 1,09,255 பேர் முதலீடு செய்துள்ளனர், அதன் முதலீடு சுமார் ரூ. 2,438 கோடி வரை பெற்றது ஆருத்ரா நிறுவனம். 10 முதல் 30 சதவிகிதம் வட்டி தருவதாக கூறியிருந்த இந்த நிறுவனம் உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை.

மேலும் பணம் முதலீடு செய்ததற்கான உரிய ரசிதையும் வழங்காமல் இருந்திருக்கிறது ஆருத்ரா நிறுவனம். ஆதலால் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது மற்றும் 11 பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குனராக கருதப்படும் ஹரிஷ் என்பவர் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் ஆருத்ரா நிறுவனத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் பல வெளியில் பரப்பப்பட்டு வந்தன. அதாவது ஆருத்ரா நிறுவனம் மக்களிடமிருந்து மோசடியில் பெற்ற பணம் பாஜகவின் மாநில தலைமை மற்றும் கட்சியினருக்கு சென்றதாக பல குற்றச்சாட்டுகளை திமுக மக்கள் மன்றத்தில் முன்வைத்து வந்தது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த ஆருத்ர நிறுவனம் செய்த மோசடிக்கு பின்னால் அண்ணாமலை பெரிய தொகையை பெற்றுள்ளதாகவும் ஆர் எஸ் பாரதி அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த நிலையில் கர்நாடக பணிகளில் இருந்து திரும்பிய அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். இந்த சந்திப்பில் ஜூலையில் முதல் வாரத்தில் திமுகவின் சொத்து பட்டியலின் இரண்டாம் பாகம் வெளியிடப்படும் மேலும் இதில் முன்பு இடம்பெறாத 21 புதிய நபர்கள் இடம்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பாஜக மீது குற்றம் சாட்டப்படும் ஆருத்ரா நிறுவனத்துடமிருந்து திமுகவில் எந்த அமைச்சர்கள் எவ்வளவு பணத்தை பெற்றுள்ளனர் என்பதையும் திமுகவின் சொத்து பட்டியலில் இரண்டாம் பாகத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை முதல் பாகத்தில் வெளியிட்ட அண்ணாமலை ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து திமுகவினர் பெற்ற பணத்தை மற்றொரு தொகுப்பாக வெளியிட உள்ளார் என்ற செய்தி திமுக மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வாட்ச் பற்றி கேட்ட விவகாரத்தால் தான் சொத்து பட்டியல் வெளிவந்துள்ளது தற்போது பாஜகவுடன் ஆருத்ராவை இணைத்து பேசியதன் காரணமாக ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து கைநீட்டி பணம் வாங்கி அமைச்சர்களின் பட்டியல்கள் வெளிவர உள்ள காரணத்தினால் நம்ம வாய் வச்சுட்டு நம்மளே சும்மா இல்லாம இப்படி அண்ணாமலைக்கு ஒவ்வொரு லீடா எடுத்துக் கொடுக்கிறது நமக்கு திரும்ப ஆப்பா அமையுதே என்று திமுகவினர் புலம்பி தவித்து வருகின்றனர்.

Similar News