சிக்கட்டும் என காத்திருந்த ஆளுநர் - திமுகவை சிக்க வைத்த அண்ணாமலை!

Update: 2023-05-22 02:59 GMT

எப்போ எப்போ என காத்திருந்த ஆளுநரிடம் அண்ணாமலை பற்ற வைத்த நெருப்பு

எந்த ஒரு ஆட்சி காலத்திலும் இல்லாத வகையில் ஆளும் அரசை எதிர்த்து ஆளுநரிடம் தற்போது அதிக கோரிக்கைகளும் புகார்களும் இருக்கிறது. முதலில் துணிவு வாரிசு படத்தில் நடந்த முறைகேடு பற்றி மூத்த வழக்கறிஞர் சவுக்கு சங்கர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மீது ஆளுநரிடம் புகார் அளித்தார், இரண்டாவதாக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியானதும் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் கோரிக்கையை முன் வைத்தார். மூன்றாவதாக கள்ளச்சாராயம் விவகாரத்தில் முழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். அடுத்ததாக பல கட்சியினர்களும் இந்த கள்ளச்சாரய விவகாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு காரணமாக நடவடிக்கை எடுக்க கோரி ஆங்காங்கே போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஆளுநரிடம் வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் கள்ளச்சார விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் முழு நடவடிக்கைகளையும் அறிக்கையாக சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டு உள்ளார்.

இத்தனை கோரிக்கைகள் பெறுவதற்கு முன்பு ஆளுநருக்கு திமுக அரசிற்கும் இடையே பல்வேறு சலசலப்புகள் அவ்வப்போது ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளது. அரசு நிதியை ஆளுநர் கையாளுவதில் விதிமீறல் இருக்கிறது என்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்த பொழுது குற்றச்சாட்டு முன் வைத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து அதன் விளக்கங்களையும் ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார், மேலும் அந்த பேட்டியில் திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியானது இந்த கொள்கை ஒரே நாடு ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானதாகவும் செயல்படுகிறது என்று திமுக அரசின் மீது தனது விமர்சனத்தை முன் வைத்தார். மேலும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் 3.25 லட்சம் புத்தகங்களுடன் கலைஞர் நூலகம் அமைக்க உள்ளதாக தெரிவித்தனர் ஆனால் இதில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களைத் தவிர மற்ற மொழி நூல்கள் இடம் பெறவில்லை, இதனால் பிரிவினைவாத உணர்வு ஏற்படும் இதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் ஆளுநர் ஆர் என் ரவி கூறியிருந்தார்.

ஆளுநரின் இந்த கருத்திற்கு திமுக தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வெளிவந்தது. இப்படி ஆளுநருக்கு திமுக'விற்கும் பேச்சுவார்த்தைகள் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில் ஆளுநரிடம் திமுகவிற்கு எதிராக அதாவது ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு புகார்கள் குவிந்து கொண்டு வருகிறது. இப்படி தமிழக அரசிற்கு அடிமேல் அடி விழுகின்ற வகையில் புகார்கள் எழுந்து கொண்டிருக்கின்ற நிலையில் மற்றுமொரு மிகப்பெரிய புகார் ஒன்றும் திமுகவிற்கு எதிராக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் கொடுத்துள்ளார், அதுவும் இரண்டு பைல்கள் கொண்ட மொத்த ஆதாரங்கள் தொகுப்புடன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநர் ஆர் என் ரவியிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே ஆளுநர் மீது தொடர்ந்து விமர்சனங்களை திமுக அரசு வைத்து வருகின்றது மற்றும் ஆளுநரை கடுமையாக விமர்சித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தியையும் மறுபடியும் திமுகவும் சேர்த்துள்ளனர். இப்படி திமுகவினர்கள் செய்யும் ஒவ்வொரு செல்களையும் ஆளுநர் மாளிகை நோட்டமிட்டு வருகிறது. இதனால் ஆளுநர் கடும் கோபத்திலும் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆளுநர் ஆர் என் ரவி தன்னிடம் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் புகார்களை அடிப்படையாக வைத்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று டெல்லியுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News