திமுகவிற்கு ஆபத்தானவர் செந்தில்பாலாஜி - வாரிவிட்ட அன்புமணி ராமதாஸ்!

Update: 2023-05-23 05:18 GMT

செந்தில் பாலாஜி திமுகவிற்கு ஆபத்தானவர் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேட்டில் மதுபான ஏடிஎம் வைத்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து செந்தில் பாலாஜி அன்புமணி ராமதாஸை விமர்சித்தார் நாடாளுமன்றம் சென்று மதுவிலக்கை பற்றி பேசாமல் இங்கிருந்து கொண்டு மதுவிலக்கு பற்றி கூறுகிறீர்களே ஏன் என கேட்டார் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமல்லாமல் வட மாவட்டங்களில் இருந்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் செந்தில் பாலாஜிக்கு எதிர்ப்புகள் குவிந்தன.

அதிலிருந்து அன்புமணி செந்தில் பாலாஜி இடையேயான பனிப்போர் அதிகமானது, இதனை தொடர்ந்து தற்பொழுது தீவிர மதுவிலக்கு போராட்டத்தை அன்புமணி ராமதாஸ் கையில் எடுத்துள்ளார். மேலும் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, 'செந்தில் பாலாஜி திமுகவிற்கு எப்பொழுதும் தலைவலியாக இருக்கப் போகிறார். நான் சொல்லி வருகிறேன் திமுகவை ஒரு வழி செய்யாமல் செந்தில் பாலாஜி விட மாட்டார். இது நடக்கும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினை நான் எச்சரிக்கிறேன்' என செந்தில் பாலாஜி திமுகவிற்கு ஆபத்து என பத்திரிகையாளர் மத்தியில் வெளிப்படையாக அன்புமணி ராமதாஸ் பேசியது தற்போது செந்தில் பாலாஜி தரப்பை மேலும் கோபமடைய செய்துள்ளது.


ஆனால் இது குறித்து செந்தில் பாலாஜி இதுவரையில் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Similar News