காழ்ப்புணர்ச்சியால் பா.ஜ.க. நிர்வாகியின் வீட்டை இடித்த மாரண்டஅள்ளி தி.மு.க. பேரூராட்சி தலைவர்!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி கணபதி நகரில் வசித்து வருபவர் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா, இவர் தனது சொந்த நிலத்தில் புதியதாக 4 ஏக்கர் பரப்பளவில் லே அவுட் அமைத்துள்ளார்.

Update: 2023-05-25 08:05 GMT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி கணபதி நகரில் வசித்து வருபவர் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா, இவர் தனது சொந்த நிலத்தில் புதியதாக 4 ஏக்கர் பரப்பளவில் லே அவுட் அமைத்துள்ளார். மேலும் பூங்கா அமைப்பதற்காக பேரூராட்சி நிர்வாகத்திற்கு லே அவுட்டில் ஒரு பகுதி நிலத்தையும் ஒதுக்கி கொடுத்துள்ளார்.


மேலும் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் வீடு கட்டி குணா குடியிருந்து வருகிறார். லே அவுட்டிற்கு அங்கீகாரம் தருவதாக கூறி நிலத்தை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.


இதனால் அதிர்ச்சியடைந்து தட்டி கேட்ட குணா மீது காழ்புணர்ச்சி கொண்ட மாரண்டஅள்ளி பேரூராட்சி தி.மு.க. தலைவர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக் கனி உள்ளிட்டோர் போலீசார் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்துடன் சென்று வீட்டை இடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த குணா இது சம்மந்தமான நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், வழக்கு முடியும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவர் வெங்கடேசன் ஆகியோரின் கண் அசைவில் வீட்டின் ஒரு பகுதியை இடித்து தள்ளினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குணா மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் வடித்து தற்கொலை செய்து கொள்வதாக வீட்டிற்கு ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் வீட்டை இடிப்பதை தவிர்த்து திரும்பிச்சென்றனர்.


பேரூராட்சி நிர்வாகம் பூங்கா அமைப்பதற்கு நிலம் வழங்கியவரின் வீட்டையே இடிக்கிறார்களே என்று தி.மு.க. அரசு மீது மக்கள் குற்றச்சாட்டை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News