யாருக்கும் தெரியாமல் லண்டன் சென்று வந்த உதயநிதி, ஒதுக்கப்பட்ட மாப்பிளை - கசிந்த பரபர தகவல்கள்
முதல்வர் சிங்கப்பூர் செல்லும் முன்பு யாருக்கும் தெரியாமல் உதயநிதி லண்டன் சென்று விட்டு வந்த தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பன்னாட்டு முதலீடுகளை உருவாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயணங்கள் மேற்கொள்ள திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று சிங்கப்பூர் புறப்பட்டார். இந்த பயணத்தின் பொழுது இரு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பயண திட்டப்படி முதல்வர் ஸ்டாலின் முதலில் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் அங்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை சார்ந்த 350 க்கும் மேலான கலந்து கொள்ள உள்ள வணிக நிறுவன பிரதிநிதிகள் உடன் உரையாடி பின்பு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவிக்கிறது.
பிறகு அந்த பயணம் முடிந்த உடன் ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ மற்றும் ஒடிசா நகரங்களுக்குச் முதல்வர் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிறகு ஜப்பானில் உள்ள முதலீட்டாளர்களிடம் கலந்துரையாடி தமிழகத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் மேலும் பல்வேறு முதலீடுகள் தமிழகத்திற்கு ஏற்றவாறு ஈர்க்கவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார் என அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்னன.
இப்படி முதல்வர் ஸ்டாலின் தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொள்கிறார் என்ற அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரிகள் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலினுடன் சிங்கப்பூர் சென்றார். முன்னதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இரு தினங்களுக்கு முன்னரே சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். முதல் நாளான இன்று சிங்கப்பூரில் தொழில் செய்துவரும் தமிழர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் பிற தொழில் நிறுவனங்களை சந்திக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.