முதல்வர் பயணத்தில் உள்ள மர்மம் - ரகசியம் உடைத்த சவுக்கு சங்கர்!

Update: 2023-05-25 08:19 GMT

'நீங்க எதுக்கு போறீங்கன்னு எனக்கு தெரியாதா?' என முதல்வர் அயல்நாட்டு பயணம் குறித்து சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பிய விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டார், நேற்று மதியம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் பயணமானார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொள்கிறார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் இந்த பயண திட்டத்தில் முதலில் சிங்கப்பூர் சென்று அங்குள்ள தொழில் நிறுவனங்களை சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விட உள்ளதாகவும் பின்னர் ஜப்பான் பயணமாகப்போகிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் இந்த வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக தொழில் துறை அமைச்சராக தற்போது புதிதாக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா முதல்வர் செல்ல உள்ள இடங்களுக்கு சென்று அங்கு ஏற்பாடுகளை செய்ய இரு தினங்களுக்கு முன்பே சிங்கப்பூர் பயணமானார். சிங்கப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தொழில்நுட்ப துறைகளை சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து மே 26 ஆம் தேதி ஜப்பான் செல்ல உள்ளாராம். அங்கும் முதலீடாளர்களை ஈர்த்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் எட்டு நாள் வெளிநாட்டு பயணங்களில் மேற்கொண்ட பிறகு மே 31ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் முதல்வரின் வெளிநாடு பயணம் பற்றி கூறிய விவகாரம் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சவுக்கு சங்கர் கூறியதாவது, 'முதல்வர் இந்த திட்டத்தில் சொல்லாத ஒரு நாட்டுக்கு செல்கிறார் அதுவும் லண்டன் செல்கிறார் என்று கணிக்கிறேன் ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை! அவர் அப்படி லண்டன் செல்கிறார் என்றால் அந்த தகவல் உறுதிப்படுத்தவுடன் சொல்கிறேன். முதல்வர் போகலாம் முதல்வருக்கு செல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் செல்வதை ஏன் மக்களிடம் மறைத்து கொண்டு செல்ல வேண்டும் நீங்கள் செல்வது கண்டிப்பாக உங்களது சிகிச்சையாக இருக்கலாம் அல்லது வேறு காரணங்களாக இருக்கலாம் ஓய்வாக கூட இருக்கலாம் நான் முதல்வர் ஓய்வெடுக்க செல்கிறேன் என சொல்லிட்டு போவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது ஆனால் ஏன் சொல்லாமல் செல்கிறீர்கள் இது மட்டும் அல்லாமல் சென்ற முறை நீங்கள் துபாய் சென்று வந்த முதலீடுகளே இன்னும் வராத நிலையில் எப்படி நீங்கள் அடுத்த பயணம் செல்வீர்கள்' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் இன்னும் இரு தினங்களில் முதல்வர் எங்கு சென்றார் யாரை பார்த்தார் என்ற தகவல்கள் அனைத்தும் வரும் அவை அனைத்தையும் நான் கண்டிப்பாக பொதுவெளியில் வைக்க தான் போகிறேன் என சவுக்கு சங்கர் கூறியது திமுகவினரையும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு காரணம் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜரின் முதல் ஆடியோவை வெளியிட்டது சவுக்கு சங்கர்தான் இரண்டாவது அடியோவைத்தான் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இப்படி சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோ திமுக அமைச்சரவையே மாற்ற காரணம் அமைந்ததனால் தற்பொழுது முதல்வரின் பயணத்தில் ஒளிந்திருக்கும் மர்மத்தையும் நான் வெளிக்கொண்டு வருவேன் என சவுக்கு சங்கர் கூறியதும் தற்பொழுது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமல்லாமல் முதல்வர் பயணம் சென்ற அன்றே இது போன்று சவுக்கு சங்கர் கூறியது திமுகவினரை அடுத்து எந்த தலைவலி ஏற்படுமோ என யோசிக்க வைத்துள்ளது.

Similar News