செந்தில்பாலாஜி என்ன உசத்தியா? - போர்க்கொடி தூக்கும் திமுக மூத்த தலைவர்கள்!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழுமா.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாவிற்கு ஆப்பு..!
தமிழ்நாடு டாஸ்மார்க் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களாகவே வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய வருமான வரி சோதனை ஆக அதாவது நீண்ட நாள் சோதனைகளாக இது பார்க்கப்படுகிறது. முதல் ஒரு நாளில் 40 இடங்களில் கிட்டத்தட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டுமில்லாத அவருடைய தம்பி அசோக் வீட்டில் ரெய்டு நடந்தது. ஆனால் குறிப்பாக நேற்றுடன் நிறைவு பெற்ற வருமானவரித்துறை சோதனை சுமார் 200க்கும் மேற்பட்ட அமைச்சரின் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று இருக்கிறது. இது குறித்து வருமான வரித்துறை தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. இன்னும் சிறிது நாட்களில் எத்தகைய இடங்களில் எந்தெந்த அதிகாரபூர்வமற்ற சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து தகவல்கள் வெளிவரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
டாஸ்மாக் நிறுவனத்தில் பத்து ரூபாய் அதிகமாக பாட்டில்களை வித்து அதிகமான சொத்துக்களை அமைச்சர் சேர்த்து இருக்கிறார் என கடந்த சில நாட்களாக அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வந்தனர். குறிப்பாக பார்த்தோமேயானால் திமுக ஆட்சியில் பல்வேறு துறைகள் சந்திக்காத பிரச்சனையை டாஸ்மாக் துறை பெருமளவில் சந்தித்து வந்தது. சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பார்த்தால் டாஸ்மார்க் துறையை திமுக அரசு தங்களுடைய வருமானத்தின் ஒரு பெரும் பகுதியாக நினைத்திருந்தது. ஆனால் அவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக டாஸ்மாக் துறையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பனை செய்வது, மது பாட்டில் வாங்குவோர்களுக்கு பில்களை கொடுக்காமல் ஏமாற்றுவது, சட்டவிரதமாக ஏலம் விடுவது, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் கலாச்சாராயம் குடித்து ஏற்பட்ட உயிரிழப்புகள் இப்படி தொடர்ச்சியாக திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறை கெட்ட பயிரை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒரு அவப் பெயர் காரணமாக வருகின்ற தேர்தலிலும் இது பிரதிபலிக்கும் என்ற எதிர்கால நோக்கிய கருத்தில் கொண்டு தற்போது முடிவு எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் திமுகவிற்கு மற்றும் கட்சிக்கும் கெட்ட பெயர் விளைவிக்கப்பட்டு இருக்கிறது எனவே உடனடியாக அவருடைய இலாகாவை மாற்ற வேண்டும் என்று திமுக மூத்த அமைச்சர்கள் போர்க் கோடி தூக்கி இருக்கிறார்கள்.
திமுகவில் ஒரு பிரச்சனை என்றால் எந்த அமைச்சர்கள் பிரச்சனைகள் சிக்கியிருக்கிறார்களோ அந்த அமைச்சர்களை அந்த ஒரு துறைகளில் இருந்து நீக்கி மற்றொரு இலாகாவிற்கு அவர்கள் மாற்றுவது இது ஒன்றும் புதிது அல்ல. இதுபோன்று முன்பே அமைச்சர் PT.பழனிவேல் தியாகராஜன் மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோரும் பிரச்சனைகள் சிக்கியதன் காரணமாக அவர்களுக்கு இலாகாக்கள் மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை போன்று தான் தற்போதும் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. டாஸ்மாக் துறையிலும் தொடர்ச்சியான வகையில் பிரச்சனைகள் ஏழப்பட்டு வருகிறது. டாஸ்மாக் துறையின் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களை மற்றொரு இலாக்காவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது திமுக மூத்த தலைவர்கள் மத்தியில் வலுவாக எழுந்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் காரணத்தினால் அவர் சென்னை திரும்பிய பிறகு இது பற்றி மேலிடம் ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.