10 லட்சம் குடு! இல்லை பார்களை மூடி விடுவோம் என மிரட்டப்படும் பார் ஓனர்கள்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி 'அதெல்லாம் கிடையாது யார் சொன்னா? எந்த கடை? வந்து காட்டுங்கள்' என பத்திரிக்கையாளரிடம் சீறினார். இது மட்டுமல்லாமல் அதன் பிறகு சமூக வலைதளங்களில் பத்து ரூபாய் பாலாஜி என்கின்ற பெயரில் ஹேஷ்டாக் பதிவாகி அந்த ஹேஷ்டேக் இன் கீழ் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக உலா வந்தன.
அந்த வீடியோவில் டாஸ்மாக் ஊழியர்கள், 'நாங்களா பத்து ரூபாய் கேட்கிறோம், எங்களுக்கு அந்த பாட்டிலுக்கு அதிகமாக வைத்து விற்கப்படும் பத்து ரூபாய் பணத்தை கரூர் கம்பெனி வந்து வசூலித்து செல்வார்கள் எல்லாம் மேலே தான் செல்கிறது அவர்களை கேளுங்கள்' என்றெல்லாம் கூறி வந்தார்கள். இது மட்டுமல்லாமல் டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்கள் இடம் பெற்றுள்ள தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்து போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்தை நடத்தியும் புகார் தெரிவித்தனர் கரூர் கம்பெனி என்ற பெயரில் ஒரு கும்பல் வந்து எங்களிடம் இவ்வளவு பாட்டில்களை விற்றுளீர்கள் பணத்தை கொடு என மிரட்டி வாங்கி செல்கின்றனர். ஆனால் இது குறித்து எங்கு புகார் அளித்தாலும் எங்களுக்கு விடிவு பிறக்கவில்லை என்றெல்லாம் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. அதனை தொடர்ந்து கடந்த மே 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் ஒரு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் இறங்கினர். அந்த ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பல முக்கிய கோப்புகள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அது மட்டுமல்லாமல் எட்டு நாள் நடந்த அதிரடி ரெய்டின் முடிவில் 350 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்தை மறைத்திருப்பதும், மேலும் 3 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது.