ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஓமந்தூராரில் குவிந்திருக்க கனிமொழி போட்ட தனி ஸ்கெட்ச்!
திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தான் தற்பொழுது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஐந்து கட்சி மாறியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கித் தருகிறேன் என பணம் மோசடி செய்த விவகாரம் மற்றும் இன்ன பிற வழக்குகள் ஆகியவற்றின் எல்லாம் சேர்த்து செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் அமலாக்க துறையின் தலையீடு வேண்டும் என நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை மீதான தடையை நீதிமன்றம் நீக்கியது.
இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கிய இடங்களில் அதிரடி ரெயிடை தொடங்கினார். செந்தில் பாலாஜி இல்லாத நேரமாக பார்த்து அதிரடி ரெயிடை துவங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து வாக்கிங் சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி வாடகை காரை பிடித்து ஓடி வந்தார். வீட்டுக்கு ஓடி வந்ததும் அமலாக்க துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி காலையில் வாக்கிங் சென்ற கருப்பு பனியன், ட்ராக் சூட்டை கூட கழட்ட விடாமல் அமர வைத்து கேள்வி மேல் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். அதிகாரிகள் ஒரு பக்கம் ஆவணங்கள் மற்றும் கோப்புகள் போன்றவற்றை பரிசோதிப்பது, மறுபக்கம் செந்தில் பாலாஜியை நடுகாலில் சோபாவில் உட்கார வைத்து தொடர்ச்சியான கேள்விகளால் துளைத்தெடுப்பது என அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியில் இறங்கினர்.
இது போதாது என கிடைத்த ஆவணங்களை வைத்துக்கொண்டு ஒரு குழுவினர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி என் தலைமைச் செயலக அலுவலக அறைக்குள் ரெய்டு நடத்த நுழைந்தனர். இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜியின் அலுவல் சார் உதவியாளர் விஜயகுமாரை தனியாக அழைத்துச் சென்று எங்கு வைத்து விசாரிக்கிறோம் என தெரியாத அளவிற்கு விசாரித்து வந்தனர். இப்படி தொடர்ச்சியாக அமலாக்க துறையின் கிடுக்குபிடியில் செந்தில் பாலாஜி மாட்டியது திமுகவை அல்லோலகல்லோலப்படுத்தியது. உடனடியாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் பரந்தாமன் ஆகியோர் அலறியடித்துக்கொண்டு செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்று செந்தில் பாலாஜியின் வீட்டு கதவில் அருகிலேயே 2 மணி நேரம் காத்திருந்தனர்.