மகளிர் உரிமைத் தொகை.. தி.மு.க உறுப்பினர் அட்டை வைத்திருக்கணும் போல.. அண்ணாமலை விமர்சனம்...

Update: 2023-07-09 06:42 GMT

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக மகளிருக்கான உரிமை தொகையான ரூபாய் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியை வைத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதும் தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை பெறுவதற்கான தகுதிகள் நேற்று முன்தினம் வெளியாகியிருக்கிறது. இதற்குப் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இம்முறையும் திமுக அரசு மக்களை ஏமாற்றி இருக்கிறது. இது பற்றி அவர் கூறும் பொழுது, "திறனற்ற திமுக அரசு சொல்லும் தகுதிகளை வைத்து பார்க்கும் பொழுது, நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது போல தெரிகிறது.


மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாதாம். ஷாக் அடிக்கும் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வைத்திருக்கும் திறனற்ற தி.மு.க. அரசுக்கு, மின்சாரக் கட்டணம் கட்டவே எளிய மக்களின் பாதி வருமானம் போய் விடுகிறது என்பது தெரியாதா? தமிழகத்தில் சுமார் 99.6 லட்சம் வீடுகளில் 300 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த 99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.


ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, தி.மு.க. உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டு இருக்கலாம். உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர, தமிழக மக்களுக்கு அல்ல என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News