நீட் போராட்டத்திற்கு நாள் குறித்த உதயநிதி...! அவசரமாக டெல்லி கிளம்பிய ஆளுநர்...! கேம் ஸ்டார்ட்...!
பரபரக்கும் அரசியல் சூழல் டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி... ஏன் என்று வெளியான அதிரடி தகவல்..!
தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை தற்பொழுது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் மறுபக்கம் திமுகவின் முக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை சோதனை அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மேலும் தென் தமிழகத்தில் திமுக கட்சியின் பின்னடைவு மற்றும் ஆளுநர் ரவி செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர முடியாது என உத்தரவு வெளியிட்டதும் அதற்கு எதிராக தமிழக முதல்வரின் கடிதம் வெளியிட்டதும் அதன் பின் ஆளுநர் ரவி உத்தரவையிலிருந்து பின் வாங்கியதும் ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே மோதல் ஏற்பட்டதும் என தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஆளுநர் ரவி டெல்லி சென்றிருப்பது அனைவர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது தமிழகத்தில் திமுக விற்கும் ஆளுநர் ரவிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட மோதல் இன்னும் தீராத நிலையில் உள்ளது அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பாக நீட் தேர்வில் ஆரம்பித்த இந்த போராட்டம் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட மசோதா திமுகவிற்கு எதிராக கருத்துக்களை பேசுவது என ஆரம்பித்து தற்போது முதல்வருக்கும் ஆளுநருக்கு இடையேயான போர் தீயாய்பரவி வேகம் எடுத்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு பேசுகையில் நானாக இருந்தால் நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன் என்று கூறியது தற்போது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது
ஒரு பக்கம் தமிழக மக்கள் அனைவருமே நீட் தேர்வை எதிர்த்து கொண்டு இருக்கும் நிலையில் ஆளுநர் இவ்வாறு பேசியது அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்தும் நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரியும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அமைச்சர்கள் தலைமையில் இருபதாம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்நிலையில் ஆளுநர் ரவி நேற்று காலை டெல்லிக்கு செல்வதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழல் பற்றி ஆலோசனை கேட்கவும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதிவில் நீடிப்பது தொடர்பாக சட்டத்துறையிடம் ஆலோசனை கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.