சி.எம் வந்தா எனக்கென்ன? முதல்வர் மீட்டிங்கை அலட்சியமாக புறக்கணித்துவிட்டு மலேசியா பறந்தாரா பி.டி.ஆர்?
முதல்வரின் மீட்டிங்கை புறக்கணித்தாரா பிடிஆர்...? அடுத்த மோதல் ஆரம்பமா..?
வெளியான இரண்டு ஆடியோக்களாக ரொம்ப காலமாக இருந்த கட்சியிலே மதிப்பு போய் மரியாதையும் போய் ஒதுக்கப்பட்ட நிலைமையை சந்தித்து வருகிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழகத்தில் ஆளும் பொறுப்பை ஏற்றுள்ள திமுகவின் தலைவரான முதல்வர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை பற்றியும் மருமகன் சபரீசனை பற்றியும் தெள்ளத் தெளிவாக உண்மைகளை போட்டு உடைத்தார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.
அது அவரது முதல் ஆடியோ பதிவு இரண்டாவதாக வெளியான ஆடியோ பதிவில் பாஜகவில் மேற்கொள்ளப்படும் கட்சி நடவடிக்கைகளை பற்றி பாராட்டி விட்டு தன் கட்சியில் இருக்கும் குறைபாடுகளையும் இவர்கள் தான் கட்சியின் முக்கியவர்கள் இவர்கள் கூறுவது தான் இறுதியில் நடக்கும் என்பதை எடுத்துரைத்து அடிமட்ட தொண்டர்களுக்கு திமுகவில் முன்னேறுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை எடுத்துரைத்திருந்தார்.
இந்த இரண்டு பதிவுகளிலும் இருக்கும் குரல் தன்னுடையது அல்ல என்று பி டி ஆரால் கூறப்பட்டாலும் அதற்கு செவி சாய்க்காமல் அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தி அதிக செல்வாக்கு மிகுந்த நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அவரை மாற்றினார் முதல்வர் மு க ஸ்டாலின்.
அதற்குப் பிறகு எந்த ஒரு திமுக நிகழ்ச்சி என்றாலும் பி டி ஆர் முன்னிலைப்படுத்தப்படுவது இல்லை ஏன் கலந்து கொள்வது கூட இல்லை அழைப்புகள் வந்தால் தானே கலந்து கொள்வதற்கு என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும் நாம் கூறியதை கேட்காமல் கடந்த ஆட்சியில் ஊழல்வாதி என்று கூறிய அவரையே தற்போது காப்பாற்றும் வகையில் திமுக தலைமை சிலவற்றை செய்கிறது என்ற கோபத்திலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அவரை சந்திக்க பி டி ஆர் செல்லவில்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.