ஆதி யோகி சிலையை அகற்ற முயற்சியா.. இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு..

Update: 2023-08-28 04:23 GMT

கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்களை இணைத்து, ஆன்மிக புத்துணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பிரச்னைகள் நிகழ்ந்த போதெல்லாம், உரிய ஆவணங்களை பலமுறை கோர்ட்டில் சமர்ப்பித்து, வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி ஈஷா அறக்கட்டளை, ஆதியோகி சிலை அமைப்பு தொடர்பான உரிய ஆவணங்களை ஒப்படைத்து, தன் மீது சுமத்தப்படும் அவதுாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம் என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.


இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் இது பற்றி கூறும் பொழுது, காழ்ப்புணர்ச்சியில் சில அமைப்புகள் ஒன்றிணைந்து ஆதியோகி சிலையை அப்புறப்படுத்தும் முயற்சியை எடுக்க நினைப்பது கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை அழிக்கும் செயலாகும். இந்து மத சேவை மையங்களை, அறக்கட்டளைகளை அழிக்க வேண்டும் என்பதே நாத்திக, கம்யூனிஸ்ட், நக்சல் மற்றும் பிரிவினைவாதிகளின் நோக்கமாக இருக்கிறது.


சட்டம் என்று வரும் போது, அது அனைத்து மதத்தினருக்கும் பொது என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசும், நீதிமன்றமும் செயல்பட வேண்டும் என்பது, வெகுஜன மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. என்றும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News