புதுச்சேரி காங்கிரஸில் பிளவு!! வைத்திலிங்கம்-நாராயணசாமி மோதல்!!

Update: 2026-03-24 09:45 GMT

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் முடியும் நிலையில், என்.டி.ஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இன்னும் தெளிவில்லை.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கர், 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 'ஏ' மற்றும் 'பி' படிவங்கள் வழங்கப்பட்டன.


ஆனால், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு வழங்கப்படவில்லை. இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வைத்திலிங்கம் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதாக தகவல் பரவியுள்ளது.


நாராயணசாமியின் ஆதரவாளர்கள் வைத்திலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கிளம்பிய வைத்திலிங்கத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

Similar News