தி.மு.க. சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் எழிலன் குழந்தைகள் மத்தியில் இந்துக் கடவுள் நாராயணன் மற்றும் பிரம்மரிஷி நாரதரை பற்றி ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்துக்களையும் இந்து கடவுள்களையும் குறிப்பிட்ட சில சமூகத்தின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக விமர்சனம் செய்து வருவது திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திமுக சார்பாக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் எழிலன் இந்துக் கடவுள் நாராயணனை பற்றி ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
குழந்தைகளிடம் சிறுவயதில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டால் அது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். இதனை நன்றாக தெரிந்து கொண்டு பள்ளி குழந்தைகளிடம் மதமாற்ற நடவடிக்கைகளில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக இந்துக் கடவுள்களைப் பற்றி இழிவான தவறான கருத்துக்களை குழந்தைகள் மனதில் பதிய வைத்து அவர்கள் தங்களது கலாச்சாரத்தையே வெறுக்க வைக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
இதே பாணியைத் தான் திராவிடர் கழகமும் அதிலிருந்து பிரிந்த திமுகவும் பின்பற்றுகின்றன. அந்த வகையில் தான் திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எழிலன், நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகளிடம் இந்து கடவுள்களைப் பற்றி ஆபாசமாக பேசியுள்ளார். அவர் தனது பேச்சில் சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்று நிரூபிப்பதற்காக கதை ஒன்றை கூறுகிறார். அந்த கதையில் நாரதரும் பெருமாளும் உரையாடியதாக கட்டுக்கதை ஒன்றை கூறுகிறார்.
குழந்தைகள் மத்தியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியுள்ளார். பகுத்தறிவாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இதுபோன்ற சிலர் இந்து கடவுளை மட்டுமே அவமதித்து பேசி வரும் நிலையில் இந்து திருமண சடங்கில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் கேவலமான அர்த்தம் கொண்டவை என்று கூறிய திமுக தலைவர் ஸ்டாலினை பின்பற்றி தற்போது ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எழிலன் இந்து கடவுளை பற்றி ஆபாசமாக பேசியது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.