"தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜாதி அரசியல் செய்கிறார்" - உடன்பிறப்புகள் ரகளை!

Update: 2021-03-13 05:12 GMT

தி.மு.க. சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் அக்கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையான நிலையில் தற்போது உளுந்தூர்பேட்டையில் தி.மு.க. சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து தி.மு.க. நிர்வாகி ஒருவரே ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு தி.மு.க சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டனை அறிவித்ததற்கு அந்த பகுதியை சேர்ந்த வசந்தவேலின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கட்சி தொண்டர் ஒருவர் தனது கட்சி வேட்டி சட்டைகளை ரோட்டில் போட்டு எரித்துள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஜாதி அரசியல் செய்கின்றார் என்று கோஷம் எழுப்பி ரகளையில் ஈடுபட்டார். பொது இடங்களில் இது போன்று செயலில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.க வேட்பாளரை எதிர்த்து கட்சி வேட்டி சட்டையை எரித்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக சீட் கிடைத்த மகிழ்ச்சியில் ஆசி வாங்க சென்ற வேட்பாளரை சீட் கிடைக்காத விரக்தியில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் செருப்பால் அடித்து கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது நிலையில் தற்போது பொது இடத்தில் வேஷ்டி சட்டையை தீ வைத்து எரித்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News