"மணி ஒன்னாச்சா?" நேரம், சகுனம் பார்த்து மனு தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர்!

Update: 2021-03-16 07:33 GMT

திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் எமகண்டம் முடிந்த பிறகு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் இதனால் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று காட்டிக் கொள்ளும் பெரியார் பேரன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார். நேற்று காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை எமகண்டம் நேரம் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் எமகண்டம் முடிந்த பிறகு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நடைபயணம் மேற்கொண்டார்.

பிறகு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலகர் அறைக்குள் செல்வதற்கு முன் 15நிமிடங்கள் காத்திருந்தார். அதன் பின்னர் அருகில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி நவீன்குமாரிடம் "ஒரு மணி ஆகிவிட்டதா" என்று உறுதிப்படுத்திக் கொண்டு நல்ல நேரமான 1.01 மணி

ஆகியதும் வேட்புமனுவை தனது மகளிடம் அளித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் போட்டியிடும் வேட்பாளர்தான் மனுவை கொடுக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்ட உடன் தன் மகளுடன் சேர்ந்து அவரும் மனுவை அதிகாரியிடம் அளித்தார். இதன் பிறகு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சாந்தாமணி மனு தாக்கல் செய்தார்.தங்களை பகுத்தறிவாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ததற்கு பெரியார் பேரன்கள் என்ன பதில் சொல்வர் என்று சமூக வலைத்தளங்களில் நக்கலடித்து வருகின்றனர்.

தேர்தல் மற்றும் தங்கள் வீட்டு சுப முகூர்த்த தினங்களில் தி.மு.க. தலைவர்கள் நல்ல நேரம் பார்த்து செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் திமுக தலைமையோ பொது மேடைகள் மற்றும் இந்து பண்டிகையின் போது இந்து கடவுள்களையும், இந்து சடங்குகளையும், சாஸ்திரங்களையும் கேலி செய்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்கள் கட்சிக்காரர்களின் மத உணர்வுகளையே மதிக்காதவர்கள் மக்களின் உணர்வையா மதிக்க போகிறார்கள் என்றும், இப்படிப்பட்ட ஒரு கட்சியில் இருக்கும் இந்துக்களை என்ன சொல்வது என்றும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Similar News