பி.கே டீமுக்கு இன்னும் கற்கால மூளை தான் இருக்கு போலயே! பெட்டியில் மனுக்கள் போடும் ஸ்டாலின் திட்டத்துக்கு பூட்டு போட்ட முதல்வர்!
செல்போன் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலினின் பெட்டிகளில் மனுக்களை போடும் திட்டத்திற்கு பூட்டு போடப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், ஸ்டாலின் போகும் இடங்களிலும் திண்ணையில் பெட்ஷீட் விரித்து போட்டு, அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறை கேட்கிறாராம். இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது மக்களை பற்றி சிந்திக்கவே இல்லை.
மக்களின் குறைகளை கேட்கவும் இல்லை, தீர்க்கவும் இல்லை. தற்போது ஆட்சியில் இல்லாத போது மக்களிடம் மனுக்களை வாங்கி, அதை பெட்டியில் போட்டு, பூட்டி சீல் வைத்து, ஆட்சிக்கு வந்தவுடன், அந்த பெட்டியை திறந்து, 100 நாட்களில்
மனுக்களுக்கு தீர்வு காண்பாராம். எப்படி கதை விடுகிறார் பாருங்கள். இது விஞ்ஞான உலகம். அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. தகவல்கள் உடனுக்குடன் செல்கிறது. ஆகவே மக்களை முன்பு போல ஸ்டாலின் ஏமாற்ற முடியாது.
நான் ஏற்கனவே சட்டமன்ற விதி 110-ன் கீழ் அறிவித்தவாறு, முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தினை நங்கவள்ளி ஒன்றியம், வனவாசியில் தான் துவக்கி வைத்தேன். இதற்கு இப்பகுதி மக்களே சாட்சி. அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி, பதிவு செய்து, அங்கேயே முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகளை வழங்கினேன்.
சேலம் மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.