ஆயிரம் விளக்கு தொகுதியில் வாயடைத்துப் போன தி.மு.க. - வெற்றியை உறுதி செய்த பா.ஜ.க!

Update: 2021-03-24 03:02 GMT

ஆயிரம் விளக்கு தொகுதியின் பா.ஜ.க.வின் நட்சத்திர வேட்பாளரான குஷ்புவிற்கு அப்பகுதி மக்களிடையே ஆதரவு பெருகி உள்ளதால் ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க.வின் நட்சத்திர வேட்பாளர் குஷ்பு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க.வைச் சேர்ந்த இந்து விரோதியான எழிலன் போட்டியிடுகிறார். ஏற்கனவே பல பொது மேடைகளில் இந்துக்களையும் இந்து கடவுள்களையும் இழிவாக பேசிய எழிலன் மீது அப்பகுதியிலுள்ள திமுகவினரே அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்களிடையே தி.மு.க. வேட்பாளர் மீது ஆதங்கம் இருந்து வரும் நிலையில் தற்போது குஷ்பு செய்துவரும் பிரச்சாரம் காரணமாக எழிலன் தோல்வியடைவது உறுதி ஆகிவிட்டது.

இந்நிலையில் மனைவி குஷ்பூவிற்காக அவருடைய கணவர் சுந்தர்.சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். தினமும் எந்த பகுதியில் பிரச்சாரம் செய்ய போகிறோம் என்று முன்கூட்டியே பட்டியலிட்டு விட்டு அதற்கு ஏற்றார்போல் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குஷ்பு மற்றும் சுந்தர்.சி செல்லும் இடமெல்லாம் மக்கள் பா.ஜ.க.விற்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூறி குஷ்பு வாக்கு சேகரித்து வருகிறார். குறிப்பாக தூய்மை இந்தியா, விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டம், மோடி வீடு, மோடி மருந்தகம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை மக்களிடையே எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் அந்த தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி உறுதியாகியுள்ளது என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரச்சார வாகனம் செல்ல முடியாத இடங்களில் பா.ஜ.க.வினர் நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர் செல்லும் இடமெல்லாம் அப்பகுதியில் உள்ள பெண்கள் குஷ்புவை தங்கள் வீட்டு பெண்ணாகவே நினைத்து ஆரத்தி எடுத்து அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர். ஆர்வத்தோடு அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது அவருக்குக் கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் குஷ்பு வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News