"பேசி என் கனவில் மண் அள்ளி போடாதீர்கள்" என உருக்கமாக கட்சியினருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!

Update: 2021-03-28 03:30 GMT

அரசியல் நாகரீகம் தேவை என எந்த கட்சி மேடை போட்டும், இணையங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசி வருகிறதோ அந்த கட்சி'யின் பேச்சாளர்கள்தான் கண்ணியம் என என்னவென்றால் தெரியாத அளவிற்கு பேசி வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்து சி.என்.அண்ணாதுரை கூறி மூன்று வாரத்தைகளான கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் தி.மு.க'வினர் காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் தி.மு.க'வை சேர்ந்த எம்.பி ஆ.ராசா மற்றும் தி.மு.க கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வரும் ஐ.லியோனி ஆகிய இருவரும் தனித்தனியே தங்களின் பிரச்சாரத்தின் போது எதை பேச வேண்டும் என்ற இங்கிதம் கொஞ்சம் கூட இல்லாமல் மூன்றாம் தர பேச்சை தங்களின் பிரச்சாரங்களில் பேசி வந்தனர்.

திண்டுக்கல் ஐ.லியோனி பேசும் போது "பெண்களின் இடுப்பு பேரலாகிவிட்டது" என பேசியது பெண்களை கோபப்படுத்தியது. வேலைப்பளு, மருத்துவ முறை, குடும்பம சுமை காரணமாக பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை தங்களின் பிரச்சார சுவாரஸ்யத்திற்காக இப்படி கிண்டலாக பேசுவதை கண்டு தி.மு.க மீது பெண்கள் கோபம் கொண்டனர்.

மேலும் மற்றுமொரு பிரச்சாரத்தில் தி.மு.க எம்.பி ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி'யை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் "கள்ள உறவில் பிறந்தவர்" என விமர்சனம் செய்தது பெண்கள் மட்டுமின்றி அனைவரின் கோபத்தையும் கிளரச்செய்தது. ஸ்டாலினை உயர்த்தி பேச வேண்டும் என்ற நோக்கோடு எதிர் கட்சியின் முக்கிய தலைவரை அதுவும் தமிழக முதல்வரை தரமிழந்து பேசியது ஆ.ராசா அவர்களின் எண்ண ஓட்டத்தையே எடுத்து காட்டுகிறது என அனைவரும் கூறும் அளவிற்கு இருந்தது ஆ.ராசா அவர்களின் மூன்றாம் தர பேச்சு.

இந்த இரு முக்கிய சம்பவங்களை தொடர்ந்து நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில்,

"அன்புடைய கழக உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பரப்புரை செய்யும் போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான

சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது பெயரை குறிப்பிட்டு நீங்கள் பேசியது தவறு என ஒரு கழகத் தலைவரால் குறிப்பிட முடியவில்லை, மேலும் நீங்கள் பேசியது தவறு என குறிப்பிடுவதை விட்டுவிட்டு "நீங்கள் பேசியதால் நான் ஆட்சிக்கு வருவது சிரமமாகிவிடும்" என்கிற ரீதியில் கடிதம் எழுதியிருப்பது பேச்சை கண்டிப்பது போல் தெரியவில்லை "நான் ஆட்சிக்குக வரும் வரை வாயை மூடவும், பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்பது போல் இருக்கிறது.

அனைத்தையும் வாக்காளர்களாகிய நீதிபதிகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

Similar News