நாகர்கோவிலில் புத்தன் அணை கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் - எம்.ஆர்.காந்தி உறுதி!

Update: 2021-03-29 10:37 GMT

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக புத்தன் அணை கூட்டுக் குடிநீர் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.










நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.ஆர்.காந்தி போட்டியிடுகிறார். அந்தப் பகுதியில் மிகவும் எளிமையான, எளிதில் அணுகக்கூடிய வேட்பாளராக இருக்கும் அவருக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவரை சிறப்போடு வரவேற்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று அவர் ஒழுகினசேரி சோழ ராஜ கோவில் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நாகர்கோவில் தொகுதியில் இருக்கும் மக்களின் பிரச்சனையை போக்குவதற்கு உங்களில் ஒருவனாக பாடுபடுவேன் என்றும், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு உங்களின் பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என்றும் உங்களின் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசு செய்துள்ள நலத் திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார். மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வந்த திட்டங்கள் நாகர்கோவில் மக்களுக்கு கிடைக்கவிடாமல் தி.மு.க. தடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் நாகர்கோவில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி உறுதியாகி விட்டது என்றும் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. பல்வேறு வெற்று தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தி.மு.கவினரே தற்போதைய எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எளிமையான, எளிதில் அணுகக் கூடிய தலைவராக இருக்கும் எம்.ஆர்.காந்திக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதாகவும், அவர் வெற்றி பெறுவது நாளுக்கு நாள் உறுதியாவதாகவும் கள நிலவரத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Similar News