அ.தி.மு.க'விற்கு ஆதரவாக மாறிய தேர்தல் களம் - வழக்கம்போல் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பின்னால் ஒளிந்துகொள்ளும் தி.மு.க!
தேர்தர் களம் சமீபத்தில் மாறி அ.தி.மு.க'விற்கு சாதகமாக இருப்பதை நன்கு உணர்ந்த ஸ்டாலின் இன்று முதல் தன் பிரச்சார வியூகத்தை மாற்றி கொண்டார். ஏற்கனவே சிறுபான்மையினரின் ஓட்டுக்களை குறிவைத்து அவர்களை போராட்டத்திற்கு தூண்டி விட்ட தி.மு.க தற்பொழுது தேர்தல் களம் மாறுவது என்கிற காரணத்தால் மீண்டும் சிறுபான்மையினர் என்ற கவசத்தை கையில் எடுக்க துவங்கிவிட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் அப்பொழுது அவர் பேசியதாவது, "தேர்தல் நேரம் வந்துவிட்ட காரணத்தால் ஏதேதோ வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது மீது மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து பார்க்கவேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "உண்மை நிலை என்னவென்றால் காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து செய்யும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். அதேபோல முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். இதற்கெல்லாம் ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் ஓட்டும் போட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல குடியுரிமைத் திருத்தச் சட்டம் – சிஏஏ நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அதற்கு ஆதரவு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர்" என குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே தி.மு.க'வினரின் அடங்காத பேச்சால் தமிழக தேர்தல் களம் எடப்பாடி க பழனிசாமி அவர்களுக்கு சாதகமாக சென்றுவிட்டது. இந்த நிலையில் வேறு வழியின்றி சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்ற வியூகத்தை தி.மு.க கையில் எடுத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.