நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வெற்றி - கருத்து கணிப்பு முடிவு!

Update: 2021-03-30 05:08 GMT

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பாக போட்டியிடும் எம்.ஆர்.காந்தி வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.ஆர்.காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பான வரவேற்புகள் கிடைத்து வருகிறது. நாகர்கோவிலுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வேன் என்று தொடர்ந்து அறிவித்து வரும் அவருக்கு மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது.

சட்டம் மற்றும் நர்சிங் கல்லூரி, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எம்.ஆர்.காந்தி அறிவித்துள்ளார். மிகவும் எளிமையாகவும் அனைவரும் விரைவில் அணுக கூடியவராகவும் இருக்கும் இவர் கண்டிப்பாக சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு முந்தைய அனைத்து கருத்துக் கணிப்பிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் எம்.ஆர்.காந்தி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும் சானக்கியா டி.வி.யின் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.ஆர்.காந்தியின் பக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு அந்த தொகுதியில் பலத்த எதிர்ப்புகளும் காந்திக்கு வரவேற்பும் இருப்பது தெரியவருகிறது. இந்த கருத்து கணிப்பு முடிவிற்காக சானக்கியா டி.வி.க்கு எம்.ஆர்.காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Similar News