"ஏன் எங்களுக்கு மட்டும் ரெய்டு அ.தி.மு.கவிற்கு இல்லையா" என காழ்ப்புணர்ச்சியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி!

Update: 2021-04-02 12:30 GMT

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் பா.ஜ.க மேல் பழிபோட்டு பழகிய தி.மு.க இன்றைய ஐடி ரெய்டுகளுக்கும் பா.ஜ.க'வவை காரணம் காண்பித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

இன்று காலை முதல் சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தாமரை வீடு, அலுவலகம் உள்பட 4 இடங்களில் 25'க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சபரீசனின் நண்பர்களான கார்த்திக் (அண்ணாநகர் தொகுதி தி.முக. வேட்பாளர் மோகன் மகன்), ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.



இந்த தொடர் சோதனைகளில் ஏதேனும் ஆவணங்கள், பணம் சிக்கினால் எங்கே தி.மு.க மேல் பழி வந்துவிடுமோ என தி.மு.க முந்திக்கொண்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 3 ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஸ்டாலின் மகள் வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையை சுட்டிக்காட்டியுள்ளார். அ.தி.மு.க, பா.ஜ.க'வைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் இது போன்ற வருமான வரித்துறையினர் சோதனை செய்யவில்லை" என புகார் அளித்துள்ளார்.


கணக்குகள் சரிவர இருந்தால் இதுபோன்ற ரெய்டுகளுக்கு பயம் தேவையில்லை அதை தி.மு.க எடுத்துகொள்ளாமல் இது காழ்ப்புணர்ச்சி என புலம்புவது எங்கே ரெய்டில் மாட்டிவிடுவோமோ அதனால் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினால் புகார் அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எங்களுக்கு மட்டும் ரெய்டா ஏன் அ.தி.மு.க'வுக்கு இல்லையா என்பது போன்ற புகாரின் மூலம் தி.மு.க'வின் தில்லுமுல்லு தெரிகிறதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Similar News