"ஒருவேளை இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்" என்கிற கருணாநிதியின் டெக்னிக்கை களவாடும் தி.மு.க சீனியர்கள்!

Update: 2021-04-03 13:45 GMT

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பல பழக்கங்கள் உண்டு அதில் முக்கியமானது தேர்தல் காலத்தில் அவர் போட்டியிடும் தொகுதியில் ஒரு பெருங்கூட்டத்தை ஏற்பாடு செய்வார், பின் அந்த கூட்டத்தில் பேசும் போது ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்படும்படி "ஒருவேளை இது எனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம்" என நா தழுதழுத்தபடி கண்ணை கசக்குவார்.

உடனே கீழே குழுமியிருக்கும் உடன்பிறப்புகள் "ஆ! தலைவா! தலைவா!! நாங்க இருக்கோம் தலைவா!!!" என கூச்சல் கூப்பாடு போடுவார்கள் உடனே தேறியவராய் கருணாநிதி தனது மஞ்சள் துண்டை எடுத்து சிறுது கன்னத்தை துடைத்துவிட்டு "இந்த கருணாநிதிக்கு உங்களை விட்டால் வேறு யார்"என கரகரத்த குரலில் கூறுவார். பின் வழக்கம்போல் தேர்தலில் ஒட்டுமொத்த தி.மு.க வேட்பாளர்களே வாக்குகள் வாங்க தடுமாறினாலும் இவர் மட்டும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வித்தியாசத்தில் தேர்தலில் வென்றுவிடுவார்.

இதேபோல் தான் 2011 மற்றும் 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் தி.மு.க வரலாறு காணாத தோல்வியை தழுவினாலும் கருணாநிதி மட்டும் திருவாரூரில் ஜெயிக்க காரணம். இருமுறையும் திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் "ஒரு வேளை இது எனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம்" என கரகரத்த குரலில் தழுதழுத்தார். விளைவு இருமுறையும் திருவாரூர் எம்.எல்.ஏ.

தற்பொழுது கருணாநிதி இல்லாத இந்த தேர்தலில் மற்ற தி.மு.க'வினர் இந்த வித்தையை களவாட பார்க்கின்றனர். குறிப்பாக கடந்த வாரம் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் "ஒருவேளை இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம் என தழுதழுத்தார். உடனே கூட்டம் ஆர்ப்பரித்தது.

தற்பொழுது விராலிமலை தொகுதி தி.மு.க வேட்பாளர் பழனியப்பன் கெஞ்சி, கதறி இறுதியாக கருணாநிதியின் வெற்றியின் ராசியான டெம்ப்ளேட்டான "ஒருவேளை இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்" என்ற வசனத்துடன் கூடிய விம்மல் வீடியோ வெளிவந்துள்ளது.


ஏற்கனவே தேரதல் களம் அ.தி.மு.க'விற்கு சாதகமாக உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளிவரும் நிலையில் தி.மு.க'வின் ஓட்டுகளை தி.மு.க'வினரே பேசி காலி செய்துவிடுவார்கள் என்ற நிலையில் கருணாநிதியின் இந்த பழைய டெக்னிக்கை தி.மு.க வேட்பாளர் பழனியப்பன் கையில் எடுத்துள்ளார் என தெரிகிறது.

Similar News