"தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை, வன்முறை அதிகரிக்கும், ஏழை மக்கள் தொழில் செய்ய முடியாது" டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!

Update: 2021-04-04 10:00 GMT

"தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரிக்கும், வன்முறை தலைவிரித்தாடும், ஒரு குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் திரைப்படத் துறையிலோ, ஊடகத் துறையிலோ தாக்குபிடிக்க முடியாது, பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது" என எச்சரிக்கை விடுத்துள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கான 16-வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களை விட இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. மகாபாரத புராணத்தைப் போன்று நன்மையை வீழ்த்த பெருந்தீமை துடித்துக் கொண்டிருப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.

தி.மு.க ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழ்நாடு என்னவாகும்? என்பதை சற்று நினைத்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் நிலப்பறிப்பு, கொலை - கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரிக்கும், வன்முறை தலைவிரித்தாடும், ஒரு குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் திரைப்படத் துறையிலோ, ஊடகத் துறையிலோ தாக்குபிடிக்க முடியாது, பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது, பிரியாணி, பஜ்ஜி, தேனீர் கடைகள் வைத்துகூட ஏழை மக்கள் பிழைக்க முடியாது என்பன போன்ற சீரழிவு செயல்கள் தான் அதிகரிக்கும். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் தமிழ்நாடு வாழ்வதற்கு உகந்த மாநிலமாக இருக்காது. இப்படி ஒரு நிலை உருவாவதை நல்லவர்கள் எவரும் விரும்பவே மாட்டார்கள்.


எனவே, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவதை உறுதி செய்ய நாளை மறுநாள் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக, பா.ம.க. மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும்" என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News